தமிழ் தேசம் மக்கள் விழிப்புணர்வு நலச்சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் சென்னை மணலி அருகே மாத்தூர் எம்எம்டிஏ அருகில் உள்ள மழலையர் பள்ளியில் நடைபெற்றது அம்ரித் மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்ற இந்த முகாமில் ரத்த அழுத்தம் சர்க்கரை பரிசோதனை, ஈசிஜி, பல், கண் பரிசோதனைகள் நடைபெற்றது. இதில் சங்கத்தின் நிறுவனர் டி.சேரன், தலைவர் வி பிச்சாண்டி, செயலாளர் பிரகாஷ், பொருளாளர் டி சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.