tamilnadu

img

உடுமலையில் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட தலித் சிறுமிகள்!

சென்னை, மே 16- உடுமலைப்பேட்டையில் 9 பேர் கொண்ட கும்பலால் தலித்  சிறுமிகள் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென  அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கம், ஜீவிகா  மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்  புக்கள் தமிழக அரசை வலியுறுத்தி யுள்ளன.

பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒரு வரது குடும்பத்தினரை மேற்கண்ட  அமைப்புகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து விபரம் அறிந்தனர். பின்னர், செய்தியாளர்களையும் சந்தித்தனர். 

அதைத்தொடர்ந்து மாதர்  சங்கத்தின் அகில இந்திய செய லாளர் பி.சுகந்தி, மாநிலத் தலை வர் எஸ். வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் அ.ராதிகா  ஆகியோர் திருப்பூர் மாவட்ட ஆட்சி யரிடம் அளித்த மனு வருமாறு:

திருப்பூர் மாவட்டம் உடு மலைப்பேட்டையில் இரண்டு சிறுமிகள் 9 பேர் கொண்ட கும்ப லால் பாலியல் பலாத்காரம் செய் யப்பட்டுள்ளனர். மிக மோசமாக நடந்துள்ள இச்சம்பவம் வன்மை யாக கண்டிக்கத்தக்கது. 

இவ்வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்  மீது போக்சோ மற்றும் எஸ்சி/எஸ்டி  வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர் 18 வயதிற்கு உட்பட்ட  சிறுவர்கள். 

பெண்கள் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை குற்றங்  களில் 18 வயதிற்கு உட்பட்ட சிறு வர்கள் ஈடுபடுவது தமிழகத்தில் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு இதில்  உரிய கவனம் செலுத்திட வேண்டும்  என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோருக்கிறது.

1.     இவ்வழக்கில் துரிதமாக விசாரணை நடத்தி குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன் கடுமையான தண்டனைகள் தாமதமின்றி வழங்கிட நீதிமன்ற நடவடிக்கைகளை வேகப்படுத் திட வேண்டும்.

2.    பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவ உதவிகள், மனநல ஆலோசனைகள் உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண் டும்.

3.    குழந்தையின் படிப்பு தடைப் படாமல் இருப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண் டும்.

4.    சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட இடமான தனியார் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டு உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப் பட வேண்டும்.

5.    உடுமலை மகளிர் காவல் நிலையத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுமிகள் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டபோது கைது செய் 
யப்பட்டுள்ள குற்றவாளிகளின் குடும்பத்தார் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு பாதுகாப்பை வழங்கிட வேண்டும்.

6.    மேலும் மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமே, போக்குவரத்து, உணவு உள்ளிட்ட செலவுகளை செய்ய வேண் டும் என்று வற்புறுத்தியுள்ளனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து காவல்துறை அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

7.    போக்சோ மற்றும் எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஆறு மாத காலத்தில் விசாரணையை முடித்திடவும், வழக்கு முடியும் வரை குற்றவாளிகளை பிணையில் வெளியே வர விடாமல் தடுத்திடவும் காவல்துறை நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

8.    திருப்பூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதை வஸ்துக் களின் பழக்க வழக்கங்களை போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள் கிறது.

தீருதவியை விரைந்து வழங்குக!
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகி யோரும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

உடுமலைப்பேட்டையில் தலித் சிறுமிகள் பாலியல் வல்லுற வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளில் மூன்று பேர் 18 வயதிற்கு உட்பட்ட இளம் சிறார்கள். இந்த 9 பேர் மீதும்  போக்சோ மற்றும் எஸ்சி/ எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அனைவரும் கைது  செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் இந்நடவடிக்கை குறிப்பி டத்தக்கது என்றாலும் விசாரணை என்ற பெயரில் பாதிக்கப்பட்ட  சிறுமிகளை காவல் நிலையத்திற்கும், மருத்துவமனைக்கும் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதும், பத்திரிகையாளர்கள் பற்றும் பொதுமக்கள் முன்பும் அலைகழித்ததும் ஏற்புடையதல்ல.

எனவே, வழக்கினை முழுமையான விசாரணைக்கு உட்படுத்தி  குற்றவாளிகளுக்கு விரைவில் கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும். மேலும் குற்றம் நடைபெற்ற தங்கும் விடுதி களின் உரிமையாளர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்கள்  குடும்பத்தினருக்கு மருத்துவ உதவிகள், மனநல ஆலோசனை கள் வழங்கப்பட்டு அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

8-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் 13 வயது சிறுமியின்  கல்விச் செலவுகளை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்;  அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையை உத்தர வாதப்படுத்த வேண்டும்.

17 வயதுச் சிறுமி 5-ஆம் வகுப்பு வரை படித்தவர். எனவே. அவ ருக்கு 18 வயது நிறைவடைந்ததும் அரசு வேலையை உத்தரவாதப்  படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளின் குடும்பங்களுமே குடி யிருக்க சொந்த வீடுகள் இல்லாத நிலையில், அந்த இரு குடும்பங்க ளுக்கும் அரசு வீடு வழங்க வேண்டும். எஸ்சி/எஸ்டி வன்கொடுமை  தடுப்பு சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் இந்த  குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய தீருதவியை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

;