tamilnadu

img

வெள்ளம் பாதிப்பு.. நாகையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு...

நாகப்பட்டினம்:
அண்மைக் காலமாக நாகை மாவட்டத்தில் ‘நிவர்’புயல், ‘புரெவி’ புயல் ஆகியவற்றின் தாக்கம் மற்றும் தொடர் கனமழை காரணமாகநாகை மாவட்டத்தில்  30 ஆயிரம் ஹெக்டர் பரப்பிலான வயல்களில் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகளில் வீடுகள்விழுந்துள்ளன. சாலைகள்,வீதிகளில் வெள்ளம் சூழ்ந் துள்ளது. விவசாயிகளும் ஏழை எளிய மக்களும் வேலை யிழந்த தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

இந்நிலையில், ஞாயிறன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், நாகை மாவட்டம் திருக்குவளைக்கு வருகை தந்து,வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார். முன்னதாக, திருக்குவளையில் உள்ள கலைஞர் கருணாநிதி மற்றும் முரசொலி மாறன் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.திருக்குவளை, மேலப்பிடாகை பகுதிகளில் வெள்ளப்பகுதிகளை ஆய்வு செய்தார். அங்கு விவசாயிகள், பொதுமக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார். விவசாயிகள் வெள்ளத்தால் பாழான நெற்பயிர்களைக் கொண்டு வந்து ஸ்டாலினிடம் காண் பித்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  ரூ.25,000- அரசுவழங்கிட வேண்டும் என ஸ்டாலினிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நிவாரணப் பொருள்களை வழங்கினார். அப்போது, ஸ்டாலின்கூறும்போது, “பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் தமிழக அரசு மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்காமல், உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். கே.என்.நேரு தி.மு.க. நாகைத்தெற்கு மாவட்டச் செயலாளர் என்.கெளதமன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

;