சென்னை தியாகராய நகர் பாண்டிபஜார் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள துணிக்கடையில் திடீரென தீ பரவியது. இதனையடுத்து தீயணைப்பு துறையினர் விரைவாக வந்து கொழுந்துவிட்டு எரிந்த தீயை போராடி அணைத்தனர். மேலும் மூன்று தளங்களைக் கொண்ட இந்த வணிக வளாகத்தில் ஜவுளி மற்றும் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் திடீர் தீ பற்றியதால் அங்குள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன.
மேலும் இந்த தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும் அவர்களை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறையின் தெரிவித்தனர். இதையடுத்து இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.