சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியாக பெரும்பாக்கம் சதுப்பு நிலம் உள்ளது. வியாழக்கிழமை (மே 30) இரவு, சதுப்பு நிலத்தின் நடுவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ பரவியது. சதுப்பு நிலத்தில் இருந்த புற்கள், செடிகள், மரங்கள் தீயில் கருகின. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. சதுப்பு நிலத்தின் நடுவே தீ விபத்து ஏற்பட்டதால், தீயணைப்பு வாகனங்கள் செல்வதில் சிக்கல் எழுந்தது. இதனால் தீயை கட்டுப்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும், தீயை அணைக்கும் பணியில் வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். வெயிலின் தாக்கத்தால் இந்த தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.