வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப். 20-ல் ஆலோசனை....

சென்னை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப்ரவரி 20,  21 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி,பி., தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனைநடத்துவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தில்லியில் நடந்த கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை நடத்தினார். அதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களை எப்போதுநடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. பொதுத்தேர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் கூடுதல் வாக்குச் சாவடிகள் அமைத்தல், அதற்கான இடங்களை தேர்வு செய்தல், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்தும் ஆலோசனையின் அடிப்படையில் பிப்ரவரி கடைசி வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலை மே 5 ஆம் தேதிக்குள்நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
 

;