சென்னை, ஜூன் 8- உயர்நீதிமன்ற கண்டனத்தை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் கடந்த 2 நாட்களாக ஹெல்மெட் அணியாதவர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்ற னர்.மேலும் சென்னையில் பல இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கும், அபராதமும் விதித்து வருகின்றனர். ஒவ்வொரு போக்குவரத்து காவலருக்கும் அதிநவீன இ-சலான் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதால் வழக்குகளை விரைவாக பதிவு செய்து வருகின்றனர். கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல் படுத்தப்பட்ட பிறகும் பொதுமக்கள் பலரும் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு முறையாக அமல்படுத்தவில்லை என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுவரை ஹெல்மெட் அணிவது தொடர்பாக 4 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.