திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

தமிழகத்தில் பிப்.18ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு

சென்னை, ஜன.21-
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வருந்தன. தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி  நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் ஜன.19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

;