தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்
பணி: Programme Management Assistants - 3
சம்பளம்: மாதம் ரூ.50,000
தகுதி: ஜவுளித் துறையில் பி.டெக், எம்பிஏ, இளங்கலை டிசைன் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Data Entry Operators - 2
சம்பளம்: மாதம் ரூ.25,000
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணி புரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பணியில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.loomworld.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.8.2023
மேலும் விவரங்கள் அறிய https://loomworld.in/wp-content/uploads/2023/08/PMU-Recruitment-Notice.pdf