tamilnadu

img

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா

நிரந்தரத் தன்மை வாய்ந்த பணியிடங்களில் 2 ஆண்டுகளில் 480 நாட்கள் பணி முடித்த ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி செவ்வாயன்று (ஆக.20) மேற்கு தாம்பரம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா நடத்தினர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தென்சென்னை கிளை-2ன் தலைவர் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநிலச் செயலாளர் இ.விஜயலட்சுமி, சென்னை மண்டல செயலாளர் ஏ.முருகானந்தம், கிளைச் செயலாளர் கவுதமன், மாநில செயற்குழு உறுப்பினர் ஹெலன் தேவகிருபை, ப. டில்லிகுமார், சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் பேசினர்.