tamilnadu

img

குடிநீர் தொட்டிகளைப் பாதுகாக்க சுற்றறிக்கை!

சென்னை, மே 17 - சமீப காலமாக குடிநீர் தொட்டிகளில் மலத்தைக் கலப்பது, மாட்டுச் சாணம் கலப்பது, அழுகிய முட்டை களை வீசுவது போன்ற சம்பவங்கள் தொடர் நிகழ்வாகி வருகின்றன.

இதைத் தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடிநீர்த் தொட்டிகளுக்கும் பூட்டுப் போட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கும்படி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சா யத்து ராஜ் முதன்மைச் செய லாளர் செந்தில்குமார் உத்தர விட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் அவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

அதில், ‘பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குடிநீர் தொட்டிகள் மூடி போட்டு பூட்டு போட வேண்டும். புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி களைச் சுற்றி மதில் சுவர் மற்றும் கதவுகள், பூட்டுகள் போடுவதற்கு சேர்த்து மதிப்பீடு தயாரிக்க வேண்டும். இந்த பாது காப்பு பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்த வேண்டும். இதற்கு பஞ்சாயத்து பொது நிதியை பயன்படுத்தலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட் டம், வேங்கை வயல் பகுதி யில் பட்டியலின மக்கள் பயன் படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்தாண்டு மலம் கலக்கப் பட்டது. இதே மாவட்டம் சங்கம் விடுதியிலுள்ள குடிநீர் தொட்டி யில் அண்மையில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டது.

அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே  உள்ள திருவாந்தூரில் உள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் பயன் படுத்தும் குடிநீர் தொட்டியில் அழுகிய முட்டைகள் வீசப் பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

;