“பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்ட பிறகு ஒரு குறிப்பிட்ட மதத்தை புண்படுத்தும் அளவுக்கு பிரதமர் பேசுவது நியாயமா? மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் இப்படி பேசுகிறார். இதுவரை இருந்த பிரதமர்களில் கீழ்த் தரமாக பேசும் பிரதமர், மாற்றி மாற்றி பேசும் பிரதமர் என்றால், அவர் மோடி தான். மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது தவிர வேறு வழியில்லை” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.