tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

மாவட்ட அளவில் கூடைப்பந்தாட்ட போட்டி 
பெரியகுளம் அணி முதலிடம்

தேனி, ஜூன்.4- பெரியகுளத்தில் நடைபெற்ற  மாவட்ட அளவிலான கூடைப் பந்தாட்ட போட்டியில் பெரியகுளம் பாப் கூடைப் பந்தாட்ட கழக அணி முதல் பரிசை தட்டி சென்றது. பெரியகுளத்தில் உள்ள பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பாப் கூடைப்பந்து கிளப் மற்றும் கேப்பிட்டல்ஸ் கூடைப்பந்து கிளப் சார்பாக  கடந்த மூன்று நாட்களாக மாவட்ட அளவிலான கூடைப் பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது.

நாக் அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 18 அணிகள் பங்கேற்று விளையாடின. நாக் அவுட்  முறையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற 4 அணிகள் லீக் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்றது. லீக் சுற்றுப் போட்டிகள் முடிவுற்று இரவு மின் ஒளியில்  இறுதிப்போட்டி நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் சில்வர் ஜூப்ளி  கூடைபந்தாட்ட கழக அணிக்கும் பெரியகுளம் பாப் கூடை பந்தாட்ட கழக அணிக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற  போட்டியில் பாப் கூடை பந்தாட்ட கழக அணி 76 க்கு 46 என்ற புள்ளிகள் அடிப்படையில்  பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப்  அணியை வென்று கோப்பையை வென்றது.

 இதனைத் தொடர்ந்து போட்டி நடத்தும் கேப்பிட்டல் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் பாப் ஸ்போட்ஸ் அகடாமி நிர்வாகிகள் மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகளில் முதல் இடம் பிடித்த பாப் ஸ்போட்ஸ் கூடை பந்தாட்ட அணிக்கும், புள்ளிகள் அடிப்படையில்  இரண்டாம் இடம் பிடித்த கம்பம் பென்னிகுக்  கூடை பந்தாட்ட கழக அணிக்கும், மூன்றாம் இடம் பிடித்த பெரியகுளம் சில்வர் ஜூப்ளி  கூடை பந்தாட்ட கழக அணிக்கும் கோப்பைகள் மற்றும்  ரொக்க பரிசும் வழங்கினர்.

தேனி மாவட்டத்தில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி, ஜூன்.4- தேனி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  ஞாயி றன்று பரவலாக மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  தேனி மாவட்டத்தில் பெரியகுளம்,ஆண்டிபட்டி, சோத்துப்பாறை ,வைகை, மஞ்சளாறு உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிறன்று மாலையில் கனமழை பெய்தது .இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம்  அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 52.10 அடியை எட்டியுள்ளது.தற்போது நீர் வரத்து  176 கன அடியாக உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 47.64  அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 278  அடியாக உள்ளது .69  கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறக்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.10 அடியாக உள்ளது. வரத்து 205 கன அடி. திறப்பு 300 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம்  முழு கொள்ள ளவை எட்டி 126.28 அடியில் உள்ளது. இதனால் அணைக்கு வரும் 4.40  கனஅடி அப்படியே வெளியேற்றப்படுகிறது

சட்டவிரோத விற்பனை: மது பாட்டில்கள் பறிமுதல் 

தூத்துக்குடி, ஜூன் 4- தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை யை முன்னிட்டு மதுபான கடைகளை  அடைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சு மிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும் மதுபானங்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்பவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி அந்தோணியார் கோவில்  அருகே உள்ள ஒரு மதுபான கடை முன்பு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 170 மதுபான பாட்டில்கள், பூ மார்க்கெட் முன்பு 23 மதுபான பாட்டில்கள், பைபாஸ் ரோடு ரவுண்டானா அருகே 10 பாட்டில்கள், குறிஞ்சி நகர் மதுபான கடை அருகே 10 பாட்டில்கள், பாளையங்கோட்டை ரோடு மூன்றாவது மைல் அருகே 11 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன,

மேலும் தூத்துக்குடியில் பாளையங்கோட்டை ரோடு காய்கறி மார்க்கெட் முன்பு ஒரு அரிசி கடையில்  நம்பர்கள் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ரூ.6500 பணம் பறி முதல் செய்யப்பட்டது. இது சம்பந்தப்பட்ட காவல் நிலைய  போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி தொகுதியில், ஒரு வாக்குச்சாவடியில் தலா ஒரு ஓட்டு பெற்ற அ.தி.மு.க, த.மா.கா

தூத்துக்குடி, ஜூன் 4- தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள்  எண்ணிக்கை அண்ணா பல்கலை கழக வ.உ.சி பொறியில் கல்லூரியில் நடந்தது. இதில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தனித்தனி அறைகளில் நடந்தது. தூத்துக்குடி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருந்தது. இதில் தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் மொத்தம் 432 வாக்குகள் பதிவாகி இருந்தன. அப்போது அ.தி.மு.க வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு ஒரு வாக்கும், த.மா.கா வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜய சீலனுக்கு ஒரு வாக்கும் பதிவாகி இருந்தது. மீதம் உள்ள வாக்குகளை பெரும்பாலும்  தி.மு.க.வும், நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் பெற்று இருந்தனர்.

இதனால் அ.தி.மு.க, த.மா.கா முகவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வாக்கு எண்ணிக்கை  முகவர்கள் பதிவான வாக்குகளை திரும்ப எண்ண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

ஆனால் தேர்தல் அதிகாரிகள் அதனை நிராகரித்தனர். ஒரு வாக்குச்சாவடியில்அ.தி.மு.க, த.மா.கா வேட்பாளருக்கு தலா ஒரு ஓட்டு கிடைத்ததால் இரண்டு கட்சியினரும் அதிர்ச்சியடைந்தனர்.

கலைஞர் பிறந்த நாள்:  இராஜபாளையத்தில் அன்னதானம்

இராஜபாளையம், ஜூன். 4- விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யம் திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கப் பாண்டி யன், தென்காசி நாடாளுமன்ற உறுப்பி னர் தனுஷ் குமார் ஆகியோர் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.  உடன் ராஜபாளையம் நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷ்யாம், நகர்மன்றத் துணைத் தலைவர் கல்பனா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சிங்கராஜ், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலை வர் துரை கற்பகராஜ், நகர திமுக செய லாளர் ராமமூர்த்தி (தெற்கு) மணிகண்ட ராஜா (வடக்கு)மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ்,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

;