வியாழன், ஜனவரி 21, 2021

tamilnadu

img

பொங்கல் விழா

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சென்னை மற்றும் புறநகர் கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்பு கள் சார்பில் ஆயிரம் விளக்கு பகுதி கிழக்கு நமசிவாய புரத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழா வில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் கோலமிட்டனர். மாதர் சங்க மாநில நிர்வாகி வி.தனலட்சுமி, கட்டுமான சங்க பகுதிச் செயலாளர் வெங்கட், சீனிவாசன், லோகநாதன் உள்ளிட்டோர் பேசினர்.

பெரம்பூர் பகுதி 37 வது வட்டத்தில்இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்..

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட பொறையூர் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.புருஷோத்தமன் நினைவு பரிசுகளை வழங்கினார்.

சித்தாமூர் ஒன்றியம் இந்தளூர் பெரியார் நகரில்  வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல்  விழாவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

;