வக்பு திருத்தச் சட்டத்தை திரும்ப பெற கோரிக்கை
வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். கேஸ் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஎம் காஞ்சிபுரம் வட்டக்குழு சார்பில், புதனன்று (ஏப்.23) அய்யம்பேட்டையில் கிளைச் செயலாளர் எஸ்.லோகநாதன் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.நேரு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சங்கர், மூத்த தோழர் ஜி.வசந்தா, வட்டச் செயலாளர் எஸ்.பழனி, மாவட்டக்குழு உறுப்பினர் வி.சிவபிரகாசம் ஆகியோர் பேசினர். சி.மகேந்திரன் கே.சங்கர் ஆர்.சத்திவேல், எஸ்.சினிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருவொற்றியூர் 4ஆவது வார்டு முல்லை நகர், ஆதிதிராவிடர் காலனி பகுதிகளில் துருபிடித்த தெருவிளக்கு கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் துவக்கி வைத்தார். இதில் உதவி பொறியாளர் கணேஷ், பால் ஆன்ட்ரூஸ், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், முல்லை நகர் நிர்வாகி சங்கர், சிபிஎம் வடக்கு பகுதி செயலாளர் எஸ்.கதிர்வேல், பகுதிக்குழு உறுப்பினர் வெங்கட்டையா ஆகியோர் உடன் இருந்தனர்.
உ.பி தப்பிச்சென்ற செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது
சென்னை, ஏப்.22- தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பீர்க்கன் காரணை உள்ளிட்ட எட்டு இடங்க ளில் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் சாலையில் நடந்து சென்ற பெண் போலீ சார் உட்பட 8 பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை இருசக்கர வாக னத்தில் வந்த இரண்டு நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் பறித்து தப்பி சென்றனர். அன்றைய தினம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் சென்னையில் இருந்து ரயில் மூலமாக தங்கள் சொந்த ஊரான உத்தரப் பிரதேச மாநிலம் சாம்லி மாவட்டத்திற்கு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் தலை மையில் அமைக்கப்பட்ட 5 தனிப் படைகளை சேர்ந்த போலீசார் இரண்டு மாத காலம் உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் தங்கி யிருந்து சஞ்சய் (34), ஷாக்கோன் (36) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் கூடுவாஞ்சேரி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தோழர் ஆர்.பாபு காலமானார்
சென்னை, ஏப்.23- காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம் படப்பை பெரியார் நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கிளைச் செயலாளர், தோழர் ஆர்.பாபு உடல்நலக் குறைவு காரணமாக புதனன்று காலமானார். அவருக்கு வயது 53. இவர் கட்சியின் கிளைச் செயலாளராகவும், அப்பகுதியில் கட்டுமான சங்கத்தை அமைத்து திறம்பட பணியாற்றியவர். உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த அவரது உடலுக்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.சங்கர், பி.ரமேஷ், மூத்த தோழர் ஆர்.நந்தகோபால், குன்றத்தூர் வட்டச் செயலாளர் கே.அண்ணாதுரை, மாவட்டக்குழு உறுப்பினர் கே.புருஷோத்தமன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.கார்த்திக், வட்டக்குழு உறுப்பினர்கள் கே.மூர்த்தி, வி.சண்முகபாபு உள்ளிட்ட பலர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் பன்ரூட்டி இடிகாட்டில் இறுதி நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது.
விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன்
சென்னை, ஏப். 23- விவோ, அதன் டி தொடர் வரிசையில் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனைஅறிமுகம் செய்துள்ளது. மிகப்பெரிய 7300 எம்ஏஎச் உயர்திறன் கொண்ட பேட்டரி மற்றும் 90 வாட்ஸ்ப்ளாஷ்சார்ஜ் ஆகியவற்றைக் கொண்ட டி4 5ஜி, நேர்த்தியான மற்றும் மெல்லிய வடிவமைப்பில் ஒப்பிடமுடியாத செயல்திறனைக் கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரேஷன் 3 செயலியால் இயக்கப்படும் இது, தடையற்ற பல்பணியை பயனர்களுக்கு வழங்குகிறது. 5000 நிட்ஸ் அதிக பிரகாசத்துடன் கூடிய குவாட்-வளைந்த அமோல்டு டிஸ்ப்ளேயை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை ரூ.21,999க் ஆகும். பேருந்தை சிறைபிடித்து போராட்டம் வேலூர், ஏப்.23 – வேலூர் மாவட்டம், சேனூர் அடுத்த திருமணி கிராமத்தில் உள்ள பெண்கள் கடந்த 20 மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கு தற்போது பணிபுரிந்ததற்கான ஊதியம் வழங்காதது ஏன்? எனக் கேட்டு லத்தேரியில் இருந்து வேலூர் செல்லும் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள பாக்கி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் கூறினர்.
ஒன்றிய அரசை கண்டித்து திருவொற்றியூரில் ஆர்ப்பாட்டம்
தில்லியில் தமிழர்களின் வீடுகளை இடிக்க முயலும் பாஜக அரசைக் கண்டித்து சிபிஎம் திருவொற்றியூர் வடக்கு பகுதிக் குழு சார்பில் எர்ணாவூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, நிர்வாகிகள் கே.ஆர்.முத்துசாமி, அலமேலு, சுரேஷ், பாபு, தனலட்சுமி, ஆறுமுகம், ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.