tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தயாநிதி மாறனின் அவதூறு வழக்கு எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்!
சென்னை, மே 14- மத்தியச் சென்னை தொகுதி  திமுக நாடாளு மன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், தனது  தொகுதிமேம்பாட்டு  நிதியில் 75 சதவிகி தத்தை மக்களுக்கு  செலவிடவில்லை என்று அதிமுக  பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி தேர்தலின் போது பிரச்சாரம் செய்தார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 17 கோடியில் 95 சதவிகித நிதியை மக்க ளுக்காக செலவிட்டிருப்பதாக தெரி வித்ததுடன், “தனது அவதூறு பேச்சுக்கு  24 மணி நேரத்தில் எடப்பாடி பழனி சாமி மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு  தொடரப்படும்” என்று எச்சரித்திருந்தார். அதன்படி மக்களவைத் தேர்தல் முடிந்த  பிறகு எடப்பாடி பழனிசாமி மீது சென்னை  எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை செவ்வா யன்று (மே 14) சென்னை எழும்பூர் 13-ஆவது நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார். அதைத்தொடர்ந்து, வழக்  கின் விசாரணையை ஜூன் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி சக்தி வேல் அறிவித்தார்.

‘சவுக்கு சங்கர்’ கூட்டாளி
பெலிக்ஸ் வீட்டில் போலீசார் சோதனை!

சென்னை, மே 14- பெண் காவலர் களை மிகவும் இழி வான முறையில் பேசிய  புகாரில், யூடியூபர்  சவுக்கு சங்கர், கோவை  மாநகர சைபர் கிரைம் போலீசாரால் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டுள்ளார். சவுக்கு சங்கரின் இழிவான பேட்டியை ஒளிபரப்பிய தனியார் யூடி யூப் சேனலின் உரிமையாளரான பெலிக்ஸ் ஜெரால்டும் திருச்சி மாவட்ட  தனிப்படை போலீசாரால் கைது செய்  யப்பட்டார். இந்நிலையில் பெலிக்ஸின் நுங்கம்பாக்கம் வீடு மற்றும் அலுவல கத்தில் செவ்வாய்க்கிழமை (மே 14) போலீசார் சோதனை மேற்கொண்டனர். முன்னதாக சோதனையிடச் சென்ற போலீசாருடன், பெலிக்ஸின் மனைவி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திறக்கப்படாத சிவாஜி சிலை 
தமிழக முதல்வருக்கு செல்வப்பெருந்தகை கடிதம்

சென்னை, மே 14- திருச்சி பிரபா திரையரங்கம் அருகே 2011-இல் சிவாஜிக்கு சிலை நிறுவப்பட்டு 13 ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது. ரசிகர் ஒருவர் தொட ர்ந்த வழக்கில், சிலையை தற்போது உள்ள இடத்தில் திறக்க அனுமதிக்க முடியாது என அரசு  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தி ருந்தது. இந்நிலையில் முதலமைச்ச ருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலை வர் செல்வப்பெருந்தகை கடிதம் அனுப்பி யுள்ளார். அதில், சிவாஜி சிலையை திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் நிறுவி திறக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜூலை 2 முதல் துணைத் தேர்வு
சென்னை, மே14- பிளஸ் 1 பொதுத்  தேர்வில் தேர்ச்சி  பெறாத மற்றும் தேர் வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை 2 முதல் துணைத் தேர்வு நடை பெறும் என அரசுத்  தேர்வுகள் இயக்க கம் தெரிவித்துள் ளது. மேலும், மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல் பெற மற்றும் மறுகூட்  டல் கோரி மே 15 முதல் 20 வரை தாங்கள்  பயின்ற பள்ளி வாயிலாக விண்ணப்பிக்க லாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்  எனவும் தனித் தேர்வர்கள் மாவட்ட சேவை  மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரி வித்துள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிரதேசங்களின் தேர்வு முடிவுகள் வெளி யிடப்பட்டுள்ளன. அதன்படி, புதுச்சேரி யில் 3,660 மாணவர்கள், 3,306 மாணவி கள் என 6,966 மாணவர்கள் தேர்வு எழுதி னர். இவர்களில் 3,546 மாணவர்கள், 3,273 மாணவிகள் உட்பட 6,819 மாண வர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகி தம் 97.89 விழுக்காடாகும். காரைக்கா லில் மொத்தம் 644 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 620 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

241 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

சென்னை, மே 14- பிளஸ் 1 தேர்வில் தமிழகத்தில் 1964 மேல்நிலைப் பள்ளிகள் 100  விழுக்காடு தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

அரசுப் பள்ளிகளில்  ஈரோடு முதலிடம்

மாநிலம் முழுவதும் 38 மாவட்  டங்களில் 3 ஆயிரத்து 187 அரசுப்  பள்ளிகளில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 401 ஆண்கள், 2 லட்சத்து 36 ஆயி ரத்து 8 பெண்கள் என மொத்தம் 3  லட்சத்து 66 ஆயிரத்து 009 மாணவர்  கள் பிளஸ் 1 தேர்வை எழுதியிருந்த  நிலையில், இவர்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 88 மாணவர்கள், 1  லட்சத்து 85 ஆயிரத்து 777 பெண்கள்  உட்பட 3 லட்சத்து 13 ஆயிரத்து 865  மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள னர். தேர்ச்சி விகிதம் 85.75 விழுக் காடாகும்.

ஈரோடு மாவட்டத்தில் 113 அரசுப்  பள்ளிகளைச் சேர்ந்த மாண வர்கள் 92.86 விழுக்காடு தேர்ச்சி  பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்  துள்ளனர். 92.59 விழுக்காட்டுடன் அரியலூர் மாவட்டம் இரண்டா வது இடத்தையும், 92.06 விழுக்  காடு தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்  டம் மூன்றாவது இடத்தையும் பிடித்  துள்ளன. கோவை, மாவட்டம் 91.64  விழுக்காடு தேர்ச்சி பெற்று நான்கா வது இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் 91.16 விழுக்காடுடன் 5-வது இடத்தையும் பிடித்துள்ளன. 

தமிழ்நாடு முழுவதும் 241 அரசுப் பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சியைப் பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக அரசுப் பள்ளி கள் 85.75 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.36 விழுக்காடும், தனி யார் சுயநிதி பள்ளிகள் 98.09 விழுக்  காடும், இரு பாலர் பள்ளிகள் 91.61  விழுக்காடும், பெண்கள் பள்ளிகள்  94.46 விழுக்காடும் தேர்ச்சி விகி தத்தை பதிவு செய்துள்ளன.

பாடப்பிரிவு வாரியாக தேர்ச்சி விகிதம்
அறிவியலில் 94.31 விழுக்காடு, வணிகவியலில் 86.93 விழுக்காடு, கலைப் பிரிவுகளில் 72.89 விழுக் காடு, தொழிற்பாடத்தில் 78.72 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

;