tamilnadu

img

வாடிக்கையாளர் இருப்பிடத்தை தேடி வரும் ஐஓபி நடமாடும் வங்கி

சென்னை,மே 29-பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ‘பேங்கிங் ஆன் வீல்ஸ்’  என்ற பெயரில் நடமாடும் வங்கியை அறிமுகப்படுத்தியுள்ளது.‘நுகர்வோருக்கு முதல் இடம்என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் அர்ப்பணிப்புடன் செயல்படும்இவ்வங்கியானது, வாடிக்கையாளர்களுக்கான சேவையை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாட்டு மற்றும் கேராளாவில் உள்ள  கிராமப்புற மற்றும் சிறு நகரங்களுக்கு இந்த நடமாடும் வங்கிச் சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது.மொபைல் வேன் அல்லது பேங்கிங்ஆன் வீல் எனப்படும் நடமாடும் வங்கி,கடந்த திங்கட்கிழமை (மே 27)  சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த புதிய வசதியின் மூலம் முன்னணிமாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், குறிப்பாக மூத்த குடிமக்கள், தங்கள்வீடுகளுக்கு அருகே  அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும் முக்கிய இடங்களில் வங்கிச் சேவைகளைப் பெறமுடியும். இந்த நடமாடும் வங்கியில்,வங்கி கணக்கு ஆரம்பித்தல், வாடிக்கையாளரின் சமூகப்பாதுகாப்பு திட்டம் தொடர்பான சேவைகள், வங்கி கணக்குப் புத்தகத்தில் கணக்கு அச்சிடல் மற்றும் இதர நிதிச்சேவைகள் உள்ளிட்ட சேவைகளுக்காக,  ஒரு மைக்ரோ ஏடிஎம் இதில் இடம்பெற்றுள்ளது. வங்கி அலுவலர் ஒருவரும் நடமாடும் வங்கியில் பணிகளை மேற்கொள்வார். இந்த மாவட்டங்களில், இந்த நடமாடும் வங்கி குறிப்பிட்ட இடத்துக்கு வருவது பற்றி வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும். இதைத்தொடர்ந்து, முன்பாகவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் கீழ் வெவ்வேறு பகுதிகளில் மக்களுக்கு நடமாடும் வங்கியின் சேவை வழங்கப்படும் என்று வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆர். சுப்ரமணியகுமார் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.