tamilnadu

இனப் படுகொலையை உடனே நிறுத்து! இஸ்ரேல் அரசை கண்டித்து ஜூன் 2-இல் சிபிஎம் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

சென்னை, மே 29 - பாலஸ்தீன மக்கள் மீதான  இஸ்ரேல் அரசின் இனப்படு கொலைப் போரை உடனே நிறுத்த  வலியுறுத்தி, ஜூன் 2 அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7  அன்று முதல் சின்னஞ்சிறு பாலஸ் தீன பகுதியான காசாவில் இஸ் ரேல் ராணுவம் இனப்படுகொலை அட்டூழியத்தை தொடர்ந்து கொண்டி ருக்கிறது. இதுவரை 36,000 பேருக்கு மேல் இஸ்ரேலின் தாக்குதலால் கொல் லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட வர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களும், குழந்தைகளுமான அப்பாவி பொது மக்கள்.  இனவெறி இஸ்ரேல் அரசாங்க மானது, மருத்துவமனைகள், உண வுக்கூடங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றின் மீது குறிவைத்துத் தாக்குதல் நடத்துகிறது.

 26.05.2024 அன்று எல்லை நகரமான ரஃபாவில் அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் 45  பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் குழந்தை களும், பெண்களுமாவர்.  ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றம் போரை நிறுத்து என்று சொன்ன பிறகும் இஸ்ரேல் அரசு போரை தீவிரப்படுத்தி வரு கிறது.

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் இஸ்ரேலின் காட்டு மிராண்டித்தனத்தை ஆதரித்து ஆயுதங்களும், நிதி உதவிகளும் செய்து வருகின்றனர். இந்தியாவி லிருந்தும் இஸ்ரேலுக்கு ஆயு தங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட தகவல் களும் வந்துகொண்டிருக்கின்றன. மனிதகுலம் வெட்கித் தலை குனியும்படியான ஒரு கொடூரமான தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள இஸ்ரேல் அரசின் இனப்படுகொலை யை கண்டித்தும், 1. ரஃபாவின் மீதான தாக்குதலை உடனே நிறுத்த  வேண்டும், 2. உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும்,

3. சுயேட் சையான பாலஸ்தீன நாட்டை உரு வாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 4. மோடி அரசு இஸ்ரே லுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் 2 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் தமிழகம் தழுவிய அளவில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இடதுசாரி ஜனநாயக சக்தி களும், அமைதியையும், நியாயத் தையும் விரும்பும் மக்கள் அனை வரும் இதற்கு ஆதரவளித்திட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

;