திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

தோழர் வி.கே.எம். சுந்தர் மறைவுக்கு சிபிஎம் இரங்கல்....

சென்னை:
தோழர் வி.கே.எம். சுந்தர் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தென்சென்னை மாவட்டத்தில் வடபழனி பகுதியில் கட்சியைக் கட்டும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டு மறைந்த தோழர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மகன் தோழர் வி.கே.எம். சுந்தர் (வயது 42) ஜனவரி 22 அன்றுஉடல்நலக்குறைவால் மரண மடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியை யும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.கட்சி மற்றும் வர்க்க, வெகுஜன மாநாடுகளில் உணவு ஏற்பாடுகளை கவனித்து வந்த அவரது தந்தை தோழர்வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவிற்கு பிறகு, தோழர் வி.கே.எம். சுந்தர் சிறந்த முறையில் ஏற்பாடுகளைச் செய்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், கட்சி தோழர்களுடனும் மிகவும் அன்பாகவும், நெருக்கமாகவும் தொடர்புகளை கொண்டவர். அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது தாயார், மனைவி, குழந்தை
கள், குடும்பத்தினர் மற்றும் வி.கே.எம். ஊழியர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;