சென்னை, டிச. 24- தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு தினத்தை ஒட்டி அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகள் களைதல் மற்றும் பெண் விடுதலை க்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார். இவர் 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி தனது 94ஆவது வய தில் காலமானார். பெரியாரின் 50 ஆவது நினைவு தினம் ஞாயிறன்று (டிச. 24) தமிழ்நாடு முழுவதும் அனு சரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டா லின், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் மரி யாதை செலுத்தினர்.
திராவிடர் கழகம்
தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.
பின்னர் வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். பெரியார் திட லில் அமைந்துள்ள தந்தை பெரி யார் 21 அடி முழு உருவச் சிலைக்கு கி.வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் புதுகை எம்.எம்.அப்துல்லா, திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.