tamilnadu

img

நீதிபதி கர்ணனுக்கு கொரோனா....

சென்னை:
நீதிபதிகளை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னை, கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த கர்ணன், நீதிபதிகளையும், நீதித்துறை ஊழியர்களையும் அவதூறாகப் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்த்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘முன்னாள் நீதிபதி கர்ணனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?’ என்று நீதிமன்றம் கேட்கவே சென்னை ஆவடியில் கடந்த 2 ஆம் தேதி, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸாரால் கர்ணன் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து சிறையில் இருந்த கர்ணனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் 12 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக்குழு அவரது உடல் நிலையை கண்காணித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.