கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாநில பேரிடர் நிதியில் இருந்து உடனடி நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் குறைந்து வரும் நிலையில், புதிதாக பரவி ஒமிக்ரான் வைரஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,539-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. இதை மாநில பேரிடர் நிதியிலிருந்து உடனடியாக வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.