tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் கொறடாஅசன் மவுலானா!

சென்னை, ஜூன் 20- தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ்  நிர்வாகிகளை, மாநிலத் தலைவர் கு.  செல்வப் பெருந்தகை புதிதாக நிய மனம் செய்துள்ளார். அதன்படி,  சோளிங்கர் தொகுதி எம்எல்ஏவான ஏ.எம். முனிரத்தினம் சட்டமன்ற கட்சித்  துணைத் தலைவராகவும், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எம்.எச்.  அசன் மவுலானா சட்டமன்றக் கட்சி  கொறடாவாகவும் நியமனம் செய்யப்  பட்டுள்ளனர். இந்தப் பதவியில் முன்பு,  விஜயதாரணி இருந்தார். அவர்  பாஜகவுக்கு தாவியதை அடுத்து, புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமார் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித்  தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழிசை - அண்ணாமலை கோஷ்டி
பாஜக பிரமுகர்கள்  2 பேர் நீக்கம்!

சென்னை, ஜூன் 20-  தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை மற்றும் முன்னாள் தலைவர்  தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோ ருக்கு இடையே அண்மையில் மோதல்  வெடித்தது. அண்ணாமலை ரவுடி களைச் சேர்த்துக் கொண்டு கட்சி  நடத்துவதாக தமிழிசை வெளிப்படை யாகவே சாடினார். இதற்காக தமிழி சையை அமித்ஷா பொதுமேடையில் வைத்து கண்டித்ததாகவும் சர்ச்சை எழுந்தது. இதில் தற்போது தமி ழிசை - அண்ணாமலை ஆகிய 2  கோஷ்டிகளையுமே சமாதானப்படுத் தும் வகையில், தமிழிசை கருத்துக்கு ஆதரவாக அண்ணாமலையை விமர்  சித்த- பாஜகவின் முக்கியப் பிரமுகரான  கல்யாணராமனும், அண்ணாமலைக்கு ஆதரவாக தமிழிசையை விமர்சித்த திருச்சியைச் சேர்ந்த சூர்யாவும் பாஜக விலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில், அண்ணாமலை திமுகவுடன் ரகசிய உறவை உருவாக்கி அதிமுக -  பாஜக கூட்டணியை முறித்தார் என்ற குற்றச்சாட்டில் தான் உறுதியாக உள்ள தாக கல்யாணராமன் தெரிவித்துள்ளார். அதேநேரம் இனி பாஜக பக்கம் போக மாட்டேன் என்று திருச்சி சூர்யா கூறியுள்ளார்.

புகழேந்தி மறைவுக்கு இரங்கல்
பேரவை ஒத்திவைப்பு

சென்னை, ஜூன் 20- தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்  தொடர்,ஏற்கெனவே அறிவித்தபடி வியாழக்கிழமை (ஜூன் 20) காலை 10 மணிக்கு கூடியது. 

கூட்டம் தொடங்கியதும், மறைந்த  முன்னாள் அமைச்சர் கள் இராம.  வீரப்பன், இரா.இந்திரகுமாரி, ஏ. ராம கிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பி னர்கள் எஸ்.மாணிக்கராஜ் (நாங்குநேரி), இ. ரவிக்குமார் (பொன்னேரி), வி.  தனராஜ் (வந்தவாசி), வ. சின்னசாமி  (சேந்தமங்கலம்), ஏ.அ.கணேசமூர்த்தி  (மொடக்குறிச்சி), சு. சிவராமன் (சின்ன சேலம்), வேணுகோபால் (ஆர்.கே. நகர்),  ஆ.கு.மீ. அன்பழகன் (பெரணமல்லூர்),  எச்.எம்.ராஜூ (உதகை), சி. வேலாயு தன் (பத்மநாபபுரம்), தா. மலரவன்  (கோவை), தா.இராசாம்பாள் ( தலை வாசல்), மொ.பரமசிவம் (வானூர்),  இராமநாதன் (விருத்தாசலம்) தொகுதி  ஆகியோர் மறைவிற்கு 2 நிமிட  மௌன அஞ்சலி செலுத்தப்பட் டது. இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

குவைத் தீவிபத்து

இதைத் தொடர்ந்து, குவைத் நாட் டின் மங்காப் பகுதியில் வெளிநாட்டு தொழி லாளர்கள் வசிக்கும் பல மாடி கட்டி டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயி ரிழந்தனர். இவர்களில் பெரும்பாலா னோர் இந்தியர்கள். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 7 பேர் மரணமடைந்த னர். இவர்களுக்கும் தமிழ்நாடு சட்டப்  பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட் டது. 

புகழேந்தி

கடந்த 2021-ஆம் ஆண்டில் விக்கிர வாண்டி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் புகழேந்தி. திறம்  பட செயல்பட்ட அவர், ஏப்ரல் 6 அன்று  மரணமடைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமி டம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதைத்  தொடர்ந்து சட்டப்பேரவை நாள் முழு வதும் ஒத்திவைக்கப்பட்டது. 

;