tamilnadu

எஸ்.பி.ஐ யோனோ செயலியில் பொருட்கள் வாங்கும் திருவிழா

சென்னை, டிச. 7- பாரத ஸ்டேட் வங்கியின் யோனோ இரண்டாவது ஆண்டாக பொருட்கள் வாங்கும் திருவிழாவை (ஷாப்பிங் பெஸ்டிவல்) அறிவித்துள்ளது. எஸ்பிஐ தனது டிஜிட்டல் செயலியான யோனோவில் இந்த  திருவிழாவின் இரண்டாம் பதிப்பை அறிவித்துள்ளது. யோனோ ஷாப்பிங் திருவிழா 2.0, டிசம்பர் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை செயல் பாட்டில் இருக்கும் யோனோ பயன்படுத்துபவர்கள், 17 வணிக பங்குதாரர்களிடமிருந்து பல்வேறு வகைப் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரை தள்ளுபடியை பெறலாம் என்று அறி விக்கப்பட்டுள்ளது இந்தத் தள்ளுபடி சலுகை தவிர கூடுதல் சலுகையாக எஸ்பிஐ  கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும்பிரத்தியேக மாக 10 சதவீதம் பணம் திரும்பப் பெறுதல் (கேஷ் பேக்) சலுகையும் வழங்கப்படும். தற்போது, நூற்றுக்கும் மேற்பட்ட மின்வணிகர்கள் (இமெர்ச்சன்ட்,ஸ்) யோனோவில் இணைந்துள்ளனர் என்று வங்கி யின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.