tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

வணிகவரித்துறை அதிகாரி செந்தில்வேல் சடலமாக மீட்பு

சென்னை,டிச.6- சென்னை போரூரில் வணிக வரித்துறை துணை ஆணையர் செந்தில்வேல் சடலமாக மீட்கப்பட்டார். வணிக வரித்துறை துணை ஆணையரின் உடல் போரூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டது.

வியாழக்கிழமை காலை முதல் செந்தில்வேலை காணவில்லை. அவரை தேடி வந்த நிலையில் வெள்ளியன்று (டிச.6) அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.செந்தில்வேல் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிவிரைவு ஸ்மார்ட்போன்  அறிமுகம் 

சென்னை, டிச. 6-  உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் ஐக்யூஓஓ, இந்தியாவின் மிக வேகமான ஸ்மார்ட்போன் ‘ஐக்யூஓஓ 13’ஐ அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்இதுவரை இல்லாத வகையில் ஸ்நாப்டிராகன் 8 எலைட் மற்றும் சிப் க்யூ2 தொழில்நுட்பத்தில் ஒப்பிட முடியாத செயல்திறனை வழங்குகிறது. இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கார்டுடன் சலுகை விலையில் 51,999 ரூபாய்க்கும், 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கார்டுடன் ரூ.56,999 ரூபாய்க்கும் லெஜண்ட் மற்றும் நார்டோ கிரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். இதன் விற்பனை டிசம்பர் 11- ந்தேதி பகல் 12 மணிக்கு துவங்க உள்ளது என்று நிறு வனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தங்க விலை நிலவரம்

சென்னை, டிச.6 சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 4-ந்தேதி விலை மாற்றமின்றியும், வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்தும் விற்பனையானது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது. கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,115-க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து  ரூ.56,920-க்கும் விற்பனையானது.