tamilnadu

img

வணிக சிலிண்டர் விலை ரூ.38 உயர்ந்தது

சென்னை, செப்., 01- சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறு வனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்து கொள்ளலாம் என ஒன்றிய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. 

இதனையடுத்து மாதா மாதம் சிலிண்டர் தயாரிப்பு நிறுவனங்கள், சிலிண்டர் விலை யை நிர்ணயித்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி எண்ணெய் நிறுவனங் கள் புதிய விலையை நிர்ணயித்து அறி வித்து வரும் நிலையில், அதன்படி நாடு முழு வதும் செப்டம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை தொடர்பான அறிவிப்பு ஞாயிறன்று வெளியானது. 

அதில் 19 கிலோ எடை கொண்ட வணிக  பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.38 அதிகரிக்கப்படும் என அறிவிக்கப் பட்டது. இதன் மூலம் சென்னையில் ஞாயி றன்று முதல் வணிக சிலிண்டர் விலை ரூ.1,855-ஆக விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தொடர்ந்து 6ஆவது மாதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் வணிக சிலிண்டரின் விலை கடந்த மாதம் ரூ.7.50 உயர்ந்த நிலை யில், செப்டம்பர் மாதம் 5 மடங்கு கூடுதலாக 38 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.