tamilnadu

img

கல்லூரிகள் இன்று திறப்பு... காவல்துறை எச்சரிக்கை!

சென்னை:
தமிழகத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திங்களன்று (டிச.7) திறக்கப் படுவதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.கொரோனாவால் மூடப் பட்டு இருந்த கல்லூரிகள் 8 மாதங்களுக்கு பிறகு  திறக்கப்படுகிறது. மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் விருப்பமுள்ள மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரலாம் மற்றவர் கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் கற்றல் பணிகளைத் தொடரலாம்.ஆராய்ச்சி மாணவர்கள், முதுகலை இறுதியாண்டு மற்றும் இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரலாம்.

மாணவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் ஒரு சமயத்தில் 50 விழுக்காடு மாணவர்களை மட்டுமே கல்லூரிகள் அனுமதிக்க வேண்டும். இதனைப் பின் பற்றும் வகையில் சுழற்சி முறை வகுப்புகளை நடத்தலாம்.மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களின் உடல் வெப்பநிலையைக் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண் டும்.விடுதியில் தங்கும் மாணவர்களது உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்ய வேண்டும்.கொரோனாவால் பாதிக் கப்பட்டவர் களுடன் மாணவர்கள் நேரடியாகத் தொடர்பு இருந்தால் அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை விடுதிகளில் செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

காவல்துறை எச்சரிக்கை
கல்லூரிகள் திறக்கப்படும் இந்த நேரத்தில் பேருந்து வழித் தடத்தில் ரூட்தல என்ற பெயரில் ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொண்டு பேருந்தின் கூரையில் பயணம் செய்வது, தொங்கிக்கொண்டு வருவது 

போன்ற அராஜக செயல்களில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது.இதுபோன்று சேட்டை செய்யும் மாணவர்களுக்கும், மாணவர்கள் என்ற போர்வையில் வரும் சமூக விரோதிகளுக்கும் காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ரூட் தல என்ற பெயரில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதும், மாணவர்களும் பொதுமக்களும் அச் சப்படும் அளவுக்கு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது சட்டத்துக்கு புறம்பானதாகும். பேருந்தில் பயணிக்கும் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் செயல்களை மாணவர்கள் முழுமையாக தவிர்க்க வேண்டும்.பெற்றோர்கள் மாணவர்களுக்கு இந்த வி‌ஷயத்தில் அறிவுரை கூற வேண்டும். ஆசிரியர்களும் இதனை வலியுறுத்த வேண்டும்.இதை எல்லாம் மீறி செயல்படும் மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.வழக்குப் பதிவு செய் யப்பட்டால் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும். எனவே இதுபோன்ற செயல்களை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சென்னை காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

;