திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள்: 2 நாளில் முடிவு....

சென்னை:
கல்லூரி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியிருப்பதாவது:-

கல்லூரி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்களில் முடிவெடுத்து அறிவிக்கப்படும். ஒரு வகுப்பறையில் 30 மாணவர்களை மட்டும் அமர வைக்கவும், ஷிப்டு முறையில் வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

;