tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திக

கோவை, நெல்லை  மேயர்கள் ராஜினாமா

சென்னை, ஜூலை 3 - கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன் ஆகியோர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். கல்பனா தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் விளக்கமளித்துள்ளார். நெல்லை மாநகராட்சி திமுக மேயர் பி.எம். சரவணனுக்கு சொந்தக் கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக, அவர் மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாஞ்சோலை விவகாரம்:   தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ்!

சென்னை, ஜூலை 3- மாஞ்சோலை தனியார் தோட்ட நிர்வாகங்கள், குத்தகை காலம் முடியும் முன்பே விருப்ப பணி ஓய்வில்  செல்வதாக தங்களை நிர்ப்பந்தித்து கையெழுத்து பெற்றதாகவும், ஆனால், மாஞ்சோலையை விட்டுச் செல்ல நாங்கள் ஒப்புதல் தெரிவிக்கவில்லை என்றும் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். 

மேலும் மாஞ்சோலை எஸ்டேட்டை, தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் நடத்த வேண்டும் என்று  அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். சிபிஎம்  உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இதே கோரிக்கையை அரசிடம் வலியுறுத்தின. இந்நிலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி பட்டியல் சமூகத்தின ருக்கான தேசிய ஆணையம் தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவ காரத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து  15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

பொய் சொல்வதை நிறுத்துங்கள்! மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முழக்கம்

புதுதில்லி, ஜூலை 3 - மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத த்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி புதனன்று மாநிலங்களவையில் உரையாற்றினார். முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் மல்லி கார்ஜுன கார்கேவை பேச அனுமதிக்க வில்லை. இதனைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

அமளிக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி, ‘அரசியலமைப்பு தினம் கொண்டாடி யதை எதிர்க்கட்சிகள் எதிர்த்தனர்’ என்று திடீர் குற்றச்சாட்டை எழுப்பினார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘பொய் சொல்வதை நிறுத்துங் கள்’ என்று முழக்கமிட்டனர்.

மேலும், மோடியின் இந்த பொய்யு ரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மல்லிகார்ஜூன கார்கேவை பேசுவதற்கு அனுமதிக்காத தைக் கண்டித்தும், மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.