tamilnadu

img

சிஐடியு அமைப்பு தினக் கொண்டாட்டம்!

நாமக்கல், மே 30- இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)  54 ஆவது அமைப்பு தினத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளி வர்க்கத் தினர் வெகு எழுச்சியோடு கொண்டாடினர். நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங் களில் சிஐடியு அமைப்பு தினம் கொண்டா டப்பட்டது. நாமக்கல் தொழிற்சங்க மாவட் டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற கொடி யேற்று விழாவிற்கு, சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் சிவராஜ் தலைமை வகித்தார். தொழிற்சங்க கொடியை ஏற்றி சங்க மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் திரளா னோர் பங்கேற்றனர். இதேபோன்று, திருச்செங்கோடு டிசி எம்எஸ் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில், நிர்வாகிகள் கந்தசாமி, பழனிசாமி, அப்பு சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர். பள்ளிபாளையம் காவேரி ஆர்எஸ் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், சிஐடியு தொழிற்சங்க மாவட்டத் தலைவர் எம்.அசோ கன் தொழிற்சங்க கொடியை ஏற்றி சிறப்பு ரையாற்றினார். விசைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகிகளும், தொழிற்சங்க நிர்வாகி கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட னர். நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளை யம், பரமத்தி வேலூர், ராசிபுரம், கொல்லி மலை, சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிஐடியு தொழிற்சங்கத்தின் 54  ஆவது அமைப்பு தின விழா சிறப்பு நிகழ்ச்சி கள் எழுச்சியோடு நடைபெற்றது. தருமபுரி சிஐடியு 54 ஆவது அமைப்பு தினத்தை, முன்னிட்டு சிஐடியு தருமபுரி மாவட்டக்குழு அலுவலகத்தில் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் சி.அங்கம்மாள் தலைமை வகித்தார். சிஐ டியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன் சிறப்பு ரையாற்றினார். இதில் மாநிலக்குழு உறுப் பினர்கள் சி.கலாவதி, ஜி.நாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் சி.முரளி, சி.சண்முகம், எஸ். ஆணஸ்ட்ராஜ், வி.ஜெயராமன், சி.கவிதா, எம்.சங்கர், எம்.கண்ணதாசன், டி.வெங்கட்ரா மன் ஆகியோர் பேசினர். முன்னதாக, சிஐடியு கொடியை மாநிலக்குழு உறுப்பினர் ஜி.நாக ராஜன் ஏற்றி வைத்தார். இதில் பலர் கலந்து கொண்டனர். சேலம் இதேபோன்று, சிஐடியு அமைப்பு தின கொடியேற்று விழா, சேலம் மாவட்டம், மேட் டூர் சின்ன பார்க் அருகே உள்ள அலுவல கத்தில் நடைபெற்றது. மாவட்டப் பொருளா ளர் வீ.இளங்கோ தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பி.கே.சிவகுமார் கொடியேற்றி வைத்தார். இதில் சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் செ.கருப்பண் ணன், மின்னரங்க நிர்வாகிகள் கே.சுந்தர் ராஜன், எஸ்.செந்தில் வேலன், மாதர் சங்க  மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும்,  தொழிற்சங்க முன்னோடியும், கோவை கிழக்கு சட்டமன்றம் மற்றும் கோவை நாடாளு மன்ற உறுப்பினராக பணியாற்றிய கே.ரமணி  அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு நாளும், சிஐடியு 54ஆவது அமைப்பு தினத்தையும் ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங் களில் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சிஐடியு கோவை மாவட்டக்குழு சார்பில் சிறப்பு பேரவைக் கூ ட்டம் வியாழனன்று நடைபெற்றது.   கோவை கணபதியில் உள்ள மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத் தில், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோ கரன், தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் யு.கே. சிவஞானம் ஆகியோர் கே.ரமணி- யின் போராட்ட வாழ்வை பற்றி உரையாற் றினர். சி.துரைசாமி நன்றி கூறினார்.

;