tamilnadu

img

சவுக்கு சங்கர் பேட்டி ஒளிபரப்பு; மன்னிப்பு கேட்டது ‘ரெட் பிக்ஸ்’

சென்னை, மே 16- பெண் காவலர்களை இழி வாகவும் அவதூறாகவும் பேசிய  ‘சவுக்கு’ சங்கர் மற்றும் அவ ரைப் பேட்டி எடுத்த பிலிப்ஸ் ஜெரால்ட் ஆகியோரை தமிழ் நாடு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பெண் போலீ சார் குறித்து சவுக்கு சங்கர் பேசி யதற்காக பெலிக்ஸின் மனைவி யும் ‘ரெட் பிக்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக மேலாளருமான ஜேன் ஆஸ்டின் பெலிக்ஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். 

இதுதொடர்பாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ள ஜென்  பெலிக்ஸ், “சவுக்கு சங்கர் பேசிய  சர்ச்சைக்குரிய பேச்சில் ‘ரெட் பிக்ஸ்’க்கு உடன்பாடு இல்லை. அது ‘ரெட் பிக்ஸ்’ கருத்தும் இல்லை. இருப்பினும், இந்த  காணொலியால், காவல்துறை யில் பணியாற்றும் பெண்கள் வருத்தம் அடைந்து இருந்தால்  ‘ரெட் பிக்ஸ்’ நிறுவனம் மன் னிப்பு கேட்டுக் கொள்கிறது.

‘சவுக்கு’ சங்கர் பேசிய அந்த  சர்ச்சைக்குரிய கருத்து காவல்  துறையில் பணியாற்றும் பெண்  களுக்கு மிகுந்த மன வருத் தத்தை ஏற்படுத்தியிருப்பதால், இந்த காணொலியை ஒளிபரப்பு  செய்ததற்காக ‘ரெட் பிக்ஸ்’ ஊட கம் மனம் திறந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறது. 

சர்ச்சைக்குரிய அந்த காணொலி வழக்கு நிலுவையில்  உள்ளதால் காவல்துறை விசா ரணைக்கு தேவைப்படுவதால் வேறு யாரும் பார்க்காத வண்  ணம் அந்த காணொலி பிரைவேட்  செய்யப்பட்டுள்ளது” என குறிப்  பிட்டுள்ளார்.

முன் ஜாமீன் மனு தள்ளுபடி
பெலிக்ஸ் ஜெரால்டு கைதுக்கு முன்னதாக, சென்னை  உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அந்த மனு, வியாழக்கிழமை (மே  16) நீதிபதி சக்திவேல் முன்னிலை யில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்க றிஞர், “பெலிக்ஸ் ஜெரால்டு கடந்த வாரம் கைது செய்யப் பட்டு விட்டார். எனவே அவ ரின் முன்ஜாமீன் மனுவை தள்ளு படி செய்ய வேண்டும்” என்று  கோரிக்கை வைத்தார். இதனை  ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு வைத் தள்ளுபடி செய்தார்.

முதல்வர் தனிப்பிரிவில் புகார்
இதற்கிடையே, பெலிக்ஸ்  ஜெரால்டு கைது தொடர்பாக அவரது மனைவி ஜேன் ஆண் டின் தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். தனது புகார் மனுவில், “சவுக்கு சங்கரை நேர்  காணல் செய்த எனது கணவர் ஜெரால்டு நெறியாளர் என்ப தற்காக வழக்குகளில் உடன்  வழக்காளியாக சேர்க்கப்படு கிறார். அந்த பேட்டியை அவர்  உள்நோக்கத்துடன் பதிவு செய்யவில்லை. இந்த நேர் காணலை பதிவு செய்ததற்காக கடந்த மே 15 அன்று நான் வருத்  தம் தெரிவித்துள்ளேன். அந்த  காட்சியும் நீக்கப்பட்டு விட்டது.  எனவே எங்களுக்கு எந்தவித  இடையூறும் ஏற்படுத்தக் கூடாது” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

;