சென்னை,நவ.2- வங்கக்கடலில் உருவாகி யுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வெள்ளி யன்று முதல் 6 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப் புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதி யில் தொடங்கியது. இதனை யடுத்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கோவை மண்டலத்தை ஒட்டி மலை மாவட்டங்கள், வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதி யிலும் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் இலங்கை மற்றும் அதனையொட்டி உள்ள வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 7 நாட்களில் தென் தீபகற்பத்தில் பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், அக்.3 முதல் 6 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்திற்கு கனமழை பெய்வ தற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நட வடிக்கை வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகை யில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், அவர் இவ்வாண்டு பருவமழை குறை வாக பெய்துள்ளது என்றார்.