tamilnadu

img

சென்னை உட்பட வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; 4 மாவட்டங்களுக்கு விடுமுறை

சென்னை, அக். 14 - தென்கிழக்கு வங்கக் கடலில், எதிர்ப் பார்த்தபடி திங்கள்கிழமை காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி யானது, அடுத்த 48 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைய உள்ளதாகவும், இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும், இதன் காரணமாக சென்னை  உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங் களில் அடுத்த 3 நாள்களுக்கு மிக கனமழை பெய்யும் என்றும், மீனவர்கள் அக்டோபர் 18 வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல் பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு அக்டோ பர் 16-ஆம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப் பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் திங்களன்று பிற்பகல் அறிக்கை வெளியிட்டது.

சேலம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல் வேலி, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 32 மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்யும் என்றும் அது தெரிவித்தது.

புயலாக மாறும்?

சென்னைக்கு வர வாய்ப்புள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படு கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை யை நோக்கி வரும்போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங் களில் அதிக கனமழை 200 மி.மீ. மேல் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 16, 17 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. 

\எனினும், மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

இதனிடையே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்களன்று (அக்.14) சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரி களுடன் ஆலோசனை மேற்கொண்டார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள், மண்டல வாரியாக நியமிக்கப்பட்ட கண் காணிப்பு அலுவலர்கள் பங்கேற்றனர்.

குழு அமைப்பு  

மழையை எதிர்கொள்வதற்கு, மாநி லம் முழுவதும் தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளையும் முன்னேற்பாடுகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், கனமழைபெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்குமாறு வலியுறுத்தினார். இந்த பணிகளுக்காக சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றையும் அமைத்தார்.

பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை 


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 15 அன்று ஒரு நாள் விடுமுறை அறிவிப்பையும் வெளியிட்ட முதல்வர், தகவல் தொழில்நுட்ப நிறு வனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பணிபுரிவ தற்கான வசதிகளை செய்து கொள்ளு மாறும் அறிவுறுத்தினார்.

தயார் நிலையில் அரசு 

தலைநகர் சென்னைக்கு ஆரஞ்சு  மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதால், கடந்த காலங்களில் பெரு மழை பெய்தபோது சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் அடிப்படை யில் 180 இடங்கள் கண்டறியப்பட்டுள் ளன. அந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு சென்னை மாநகர மேயர் பிரியா உத்தர விட்டுள்ளார்.

மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடங்களில் மழை நீர் தேங்க கூடிய 25 இடங்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், பருவமழை முடியும் வரை அவசர காலப் பணிகளைத் தவிர்த்து,  சாலைத்தோண்டும் பணிகளுக்கு அனுமதி இல்லை  என்றும் 172 துயர் துடைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இத்துடன், சென்னை மாநகராட்சி யின் 21 ஆயிரம் ஊழியர்கள் சுழற்சி  முறையில் பணியாற்றவும் உத்தரவிடப் பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல் படக்கூடிய வகையில் மழை கட்டுப் பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

பொய்ச் செய்திகள்..

வடகிழக்கு பருவமழை தீவிரத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட் களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் சில விஷமிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பும் பொய் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் முதலமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் கேட்டுக் கொண்டார்.

விவசாயிகள், மீனவர்கள், நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள், விடுதிகளில் தங்கி  இருப்பவர்கள், பயணங்களை திட்ட மிட்டிருப்பவர்கள், அடுக்குமாடி குடி யிருப்புகளில் வசிப்பவர்கள் தொழிற் பேட்டைகள், வணிக நிறுவனங்கள், தனி யார் நிறுவனங்களில் பணியாற்று வோர், நடைபாதை வியாபாரி கள், கட்டுமானப் பணியை மேற்கொள் பவர்கள் கனமழைக்கான திட்டமிடு தலையும், முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள்மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறி வுரையின்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்லவேண்டும். முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவ ணங்களை நீர்புகா வண்ணம் பாது காப்பாக வைக்க வேண்டும். கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொது மக்கள் கடற்கரை, சுற்றுலாத் தலங்கள்,  வழிபாட்டுதலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூட வேண்டாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.  கர்ப்பிணிப் பெண் கள், நோயாளிகள், முதியவர்கள் ஆகி யோருக்கு தேவையான முன்னேற்பாடு களை செய்து கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.