tamilnadu

img

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு! 50 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

சென்னை, மே 29- ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (Pradhan Mantri Awas Yojana-PMAY) எனப்படும் பிரதமரின் ஏழைகளுக்கான வீடு வழங்கும் திட்டம் ஒன்றிய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இந்தத் திட்டத்தின் மூலம்  வீடு கட்ட நினைக்கும் ஒவ்வொரு வருக்கும் உதவும் வகையில் ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்து 290  ரொக்கம், பொருள் மற்றும் மனித  வளமாக அரசின் மூலம் வழங்கப் பட்டு வருகிறது. அதாவது, பிரதமர் வீடு கட்டும் என்று கூறினாலும், உண்மையில் மாநில அரசு தான் 62 சதவிகித நிதி யை வழங்குகிறது.

வெறும் 38 சத விகித நிதியை மட்டுமே ஒன்றிய அரசு வழங்குகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தில்  தான், அதிமுக ஆட்சியின் போது, ஏழைகளுக்கு சேர வேண்டிய பல  கோடி ரூபாய் பணம் மோசடி செய்  யப்பட்டுள்ளதை தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டறிந்துள்ளனர். கடந்த 2016 முதல் 2020-ஆம்  ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலகட்டத்தில் முறைகேடு களில் ஈடுபட்டதாக ஊரக வளர்ச்சி  மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதி காரிகள் 50 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்  துறை போலீசார் வழக்குப் பதிவு  செய்துள்ளனர்.

குறிப்பாக தமிழகம்  முழுவதும் கிடைக்க பெற்ற புகார்  மற்றும் விசாரணை அடிப்படையில்  7 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. கடந்த மே 20 அன்று திருவள் ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள சணபத்தூா் கிராமத்தில் வீடுகளையே கட்டாத  பயனாளிகளுக்கு விதிகளை மீறி ரூ.  31.66 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டது கண்டறியப்பட்டது. மேலும் ஏற்கெனவே சொந்த வீடுகள் உள்ள மக்கள் மற்றும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி இல்லாத பலரும் லட்சக்க ணக்கான ரூபாயை மோசடியாகப்  பெற்றுள்ளதாகவும் விசாரணை யில் தெரிய வந்துள்ளது.

இவ்வா றாக பதிவு செய்யப்பட்ட வழக்கு களில், கடந்த மார்ச் மாதம் நாகப்  பட்டினத்தில் 146 பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியில் ரூ. 1  கோடி அளவுக்கு முறைகேடு செய்  ததாக 10 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அளிக்கப் பட்ட நிதியானது, எந்த வங்கிக் கணக்குகளுக்கு செல்கிறது என  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு செய்தபோது தகுதி இல்  லாத நபர்களுக்கும், மேலும் முறை கேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் தொடர் பான நபர்களின் வங்கிக் கணக்கிற் கும் சென்றது ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்குப் பதிவு  செய்யப்பட்ட 50 அதிகாரிகளுக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பி  விசாரணை நடத்த முடிவு செய்யப்  பட்டுள்ளது.  

தி. நகர் அதிமுக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சத்யா, அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மாந கராட்சி அதிகாரிகள் உதவியோடு, கட்டப்படாத கட்டடங்களுக்குத் தொகுதி மேம்பாட்டு நிதியை செல வழித்து முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த  நிலையில் அதிமுக ஆட்சிக் காலத்  தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தி லும் ஊழல் நடைபெற்றிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

;