சென்னை, மே 7- பொருளாதார ஏற்றத் தாழ்வு களை களைய, பொருளாதார நெருக் கடிக்கு தீர்வு காண மார்க்சியத்தால் தான் முடியும் என்று ஜி.ராம கிருஷ்ணன் கூறினார்.
கார்ல் மார்க்சின் 206-ஆவது பிறந்த நாளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை ஓட்டேரியில் சிறப்புக் கருத்தரங்கம் திங்களன்று (மே 6) நடைபெற்றது. மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.ஜானகிராமன் தலைமை தாங்கினார்.
இதில் கலந்துகொண்டு கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
மார்க்சின் நூல்களைப் படித் தால் மட்டும் போதாது. அந்த தத்து வங்களை, கொள்கைகளை நடை முறைப்படுத்துவதுதான் முக்கிய மானது. உலகை குறித்து பல அறி ஞர்கள் பேசியிருக்கின்றனர், எழுதி யிருக்கின்றனர். ஆனால், மார்க்ஸ் மட்டும்தான் உலகத்தை மாற்றுவ தற்கான தத்துவத்தை உருவாக்கினார்.
அரசியல், தத்துவம், ஸ்தா பனம் இவை மூன்றும் முக்கியம். இதை எப்படி நடைமுறைப்படுத்து வது என்பதுதான் மிக முக்கியமா னது. அப்படியென்றால் சமூகப் பிரச்சனைகளுக்காக, பொருளா தாரப் பிரச்சனைகளுக்காக, வர்க்கப் போராட்டங்களுக்காக மக்கள் இயக்கங்களை வலுவாக நடத்த வேண்டும். அதற்கு மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு வைத்திருக்க வேண்டும். வகுப்பு வாதத்திற்கு எதிராக, நவீன தாராள மய பொருளாதாரக் கொள்கை களுக்கு எதிராக, பிற்போக்குச் சித் தாந்தத்திற்கு எதிராக தத்துவார்த்த போராட்டத்தை நடத்த வேண்டும். அப்படி செய்வதன் மூலம்தான் மார்க்சின் தத்துவத்தை நடை முறைப்படுத்த முடியும்.
1871-ஆம் ஆண்டு பாரிஸ் நகரை மட்டும் புரட்சியின் மூலம் கைப்பற்றி னார்கள். அந்த புரட்சி 71 நாட்களில் முடிவுக்கு விட்டது. அப்போது, தொழிலாளி வர்க்கம் மட்டும் புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றி னால் போதாது, விவசாயிகளின் ஆதரவும் தேவை என்று மார்க்ஸ் கூறினார். உலகில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து அதைக் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தோடு இணைத்து என்ன செய்வதென்று யோசிக்க வேண் டும். முறைசாரா தொழிலாளர் களை அரசியல் ரீதியாக திரட்ட வேண்டிய கடமை நம்முன் உள் ளது. அப்போதுதான் சரியான பாதையில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.
பாஜக-வின் அமைப்புச் சட்டம் காந்தியின் சோசலிசத்தைக் கொண்டு வருவோம் என்று கூறு கிறது. ஆனால் 1947-ஆம் ஆண்டு காந்தி கூறுகையில், மக்களின் பொருளாதார பிரச்சனைகளை தீர்த்துதான் ஆக வேண்டும். சமூ கத்தில் மிகப்பெரிய பொருளா தார ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின் றன. பொருளாதார சமத்துவம் தான் சோசலிசத்தின் அடிப்படை. இன்றைய நேர்மையற்ற அமைப் பில் சிலர் செல்வத்தில் புரளு கிறார்கள். பொதுமக்களுக்கு உணவு கூட கிடைப்பதில்லை. இப்ப டிப்பட்ட சூழ்நிலையில் ராமராஜ்ஜி யம் சாத்தியமில்லை என்று கூறி விட்டார். காந்தியின் சோசலிசத்தை பின்பற்றுகிறோம் என்று கூறும் பாஜக ஆட்சியில்தான் பொருளா தார ஏற்றத் தாழ்வுகள் பெரிய அள வில் அதிகரித்துள்ளன. இதனால் ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங் களின் லாபம் பல மடங்கு உயர்ந் துள்ளது. மறுபக்கம் வேலையின்மை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. சாதாரண ஏழை - நடுத் தர மக்களின் வாழ்க்கைத் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள் ளது. இதுகுறித்து பிரதமர் மோடியோ அல்லது ஒன்றிய அமைச்சர்களோ பேச மறுக்கின்றனர். இதைத் திசைத் திருப்பவே மக்களை மதத் தின் அடிப்படையில் பிளவுபடுத்து கின்றனர்.
சுரண்டல் உள்ளவரை மார்க் சின் உபரி மதிப்பு தத்துவம் நிலைத்து நிற்கும். அதனால்தான் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடு களில் பொருளாதார நெருக்கடி ஏற் பட்ட போது, மார்க்சின் மூலதனம் நூலை எடுத்து படியுங்கள் என்று போப் கூறினார். பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு மார்க்சியத் தத்துவம் தான். எனவே பொருளா தார ஏற்றத்தாழ்வுகளை களைய மார்க்சின் தத்துவங்களை உள் வாங்கி, அதை நடைமுறைப்படுத்த வேண்டும். பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள் கைகள் தான் காரணம் என்பதை பொதுமக்களிடம், தொழிலாளர் களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.