சிஏஏ, என்பிஆர்,என்ஆர்சி ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி திருவல்லிக்கேணி வட்டார ஜமா அத்துல் உலமா சபை - மடிப்பாக்கம் வட்டார பள்ளி வாசல் கூட்டமைப்பு சார்பில் செவ்வாயன்று (மார்ச் 3) மடிப்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஐக்கிய சமாதான பேரவை பொதுச் செயலாளர் ஏ,முஜிபுர் ரகுமான் பாக்கவி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ,பாக்கியம் பேசினார். தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி,வேல்முருகன், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க ஒருஙகிணைப்பாளர் இனிகோ இருதயராஜ். சிபிஎம் ஆலந்துர் பகுதிச் செயலாளர் எஸ்.அரிகிருஷ்ணன் உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பேசினர்,