இன்றும் நாளையும் 24 மணி நேர பேருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்றும், நாளையும் 24 மணி நேர பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வெளியூர் செல்லும் பேருந்துகள் இன்றும், நாளையும் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.