சென்னை, ஏப்.14-வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு வசதியாக புதிதாக பெயர் சேர்த்தவர்களுக்கும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு வீடு வீடாகவிநியோகிக்கப் பட்டுவருகிறது. 18ஆம் தேதிவாக்களிக்க கொண்டு செல்லக் கூடிய ‘பூத்’ சிலிப்தேர்தல் அலுவலர்கள் மூலம் இப்போதே வீடு வீடாக விநியோகிக்கப் பட்டு வருகிறது.ஒவ்வொரு வாக்காளரின்புகைப்படமும் பெரிய அளவில் அச்சிட்டு பெயர், பாகம் எண், வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிக் கூட விவரம் அனைத்தும் அதில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த பூத் சிலிப்புடன் ஓட்டு போட காண்பிக்க வேண்டிய11 ஆவணங்களுக்கான பட்டியல் விவரத்தையும் இணைத்து வீடு வீடாகவழங்கி வருகிறார்கள்.வருகிற 17 ஆம் தேதிக்குள் பூத் சிலிப் அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்பட்டு விடும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.