திங்கள், ஜனவரி 25, 2021

tamilnadu

img

பயோமெட்ரிக் வருகைப் பதிவு: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை:
பயோமெட்ரிக் கருவியில் வருகையைப் பதிவு செய்யாத பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. பயோமெட்ரிக் கருவிகள் கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் வருகைப் பதிவு நேரம், தகவல் உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகின்றன. இக்கருவியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதபணியாளர்கள் என அனைவரும் தங்களது வருகையை பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், பயோமெட்ரிக் கருவியில் வருகையைப் பதிவு செய்யாத பள்ளிகள், கல்விஅலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வரும் 28ஆம் தேதிக்குள்வருகையை பதிவு செய்யாததற்கான காரணத்தைஅவர்கள் விளக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைஇயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

;