சென்னை, டிச. 21 - 8 ஆவது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்று அகில இந்திய கணக்கு தணிக்கை ஊழியர் சங்கத்தின் மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இந்திய கணக்கு தணிக்கை ஊழியர் சங்கத் தின் 50 ஆவது மாநாடு டிசம்பர் 18-20 ஆகிய தேதிகளில் சென் னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மண்டல வாரியாக பணி நிய மனம் செய்ய வேண்டும், தலைமை கணக்கு தணிக்கை யாளர் (சிஏஜி) பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சங்கத்தின் அகில இந்திய தலை வராக கி.ரமேஷ், பொதுச் செயலாளராக அமித்ராய், பொருளாளராக வி.எஸ்.பினு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.