tamilnadu

வியாபாரியிடம் வழிப்பறி: உதவி ஆய்வாளர் கைது

சென்னை, மே 16- சென்னை கீழப்பாக்கத்தில் வியா பாரியிடம் ரூ.35 ஆயிரம் வழிப்பறி செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

புதுப்பேட்டை சியாலி தெருவைச் சேர்ந்தவர் லி.சித்திக் (50). இவர் அந்த  பகுதியில் தயிர் வியாபாரம் செய்து வருகிறார். சித்திக், கடந்த 9-ஆம் தேதி கீழ்ப்பாக்கம் ஈவெரா பெரியார் சாலை யில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்திக் கொண்டிருந்தார்.

 அப்போது அங்கு போக்குவரத்து காவல் துறை சீருடையில் வந்த ஒரு நபர், சித்திக்கை பார்த்து சந்தேகம் இருப்பதாக கூறி, ஏடிஎம் மையத்தை விட்டு வெளியே அழைத்து மிரட்டி யுள்ளார். மேலும் சித்திக் கையில் வைத்திருந்த ரூ.34,500 பறித்துக் கொண்டு, சித்திக் மீது பல வழக்கு களை பதிவு செய்துவிடுவேன் என மிரட்டி சென்றுள்ளார்.

பணத்தை இழந்த சித்திக், இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலை யத்தில் புகார் செய்தார்.  புகாரின் பேரில் காவல் துறையினர்  நடத்திய விசார ணையில் சித்திக்கை மிரட்டி, பணத்தை பறித்துச் சென்றது ஐசிஎப் போக்கு வரத்து அமலாக்கப்பிரிவு காவல் நிலை யத்தில் உதவி ஆய்வாளராக பணி புரியும் கீழ்ப்பாக்கம் காவலர் குடி யிருப்பில் வசிக்கும் மா.ராமமூர்த்தி (55) என்பது தெரியவந்தது

இதையடுத்து காவல் துறையினர் ராமமூர்த்தியை வியாழக்கிழமை பிடித்து விசாரணை செய்தனர். விசார ணையில் அவர், சித்திக்கை மிரட்டி  பணம் பறித்தது உறுதி செய்யப்பட் டது. இதையடுத்து காவல் துறையினர் ராமமூர்த்தியை கைது செய்தனர்.

;