சென்னை:
எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய நூல் பாடத்திட்டத்தில் தொடரும் என்று நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எடுத்துள்ள முடிவுக்கு தமுஎகச வரவேற்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் ராமலிங்கம், மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கில மாணவர்களுக்கு எழுத்தாளர் அருந்ததிராய் எழுதியுள்ள ‘வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்’என்ற நூல் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் பிரிவான ஏபிவிபியின் மிரட்டல் காரணமாக பாடத்திட்டத் திலிருந்து இந்நூல் நீக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்திருந்தார்.இதைக் கண்டித்து எழுத்தாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர் கள், மாணவர்கள், இளைஞர்கள், அறிவு ஜீவிகள் குரல் எழுப்பினர். தமுஎகச இணையவழியில் கண்டனக்கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றியது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் (மூட்டா) துணைவேந்தரின் போக்கினை எதிர்த்தது. நெல்லையில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயகவாலிபர் சங்கம் ,தமுஎகச சார்பில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் சார்பில் துணைவேந்தரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நவம்பர் 23 அன்று நடந்த மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டக்குழு கூட்டத்தில் ‘வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்’ நூல் இந்தக் கல்வியாண்டு பாடத்திட்டத்தில் பாடமாக தொடரும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதை தமுஎகசவரவேற்கிறது. கல்விப்புலங்களில் வலதுசாரிகளின் அத்துமீறலை தடுத்திட இதேபோன்றவிழிப்புநிலையும் ஒன்றுபட்ட போராட்டங் களும் எதிர்காலத்திலும் அவசியம் என தமுஎகச வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.