tamilnadu

சிபிஎம் மே தின... 1ஆம் பக்கத் தொடர்ச்சி....

1ஆம் பக்கத் தொடர்ச்சி...

தனித்ததொரு அத்தியாயமாக திகழும்.

தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்க முதலாளிகளின் ஆலோசனையை ஏற்று, தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தியுள்ளது மோடி அரசு. வேலைவாய்ப்புகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி என மோடி அரசின் அடுத்தடுத்த கேடுகளால் நொறுங்கத் துவங்கிய தேசப் பொருளாதாரம், கொரோனா ஊரடங்கால் முற்றிலுமாக மூச்சடங்கிக் கிடக்கிறது.தமிழகத்தில், சட்டமன்றத்தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. நாசகர பாஜக-அதிமுக கூட்டணி இத்தேர்தலில் படுதோல்வி அடைவது திண்ணம் என்கிற முறையில் கருத்துக்கணிப்புகள் வந்துகொண்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ளதைப்போலவே கொரோனா தொற்றால் தமிழக மக்களும் விழிபிதுங்கி உள்ளனர். தொற்று பரவலும், மரணங்களும் மக்களை பீதியடையச் செய்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிருக்குப் ஆபத்தானவர்களைக்கூட சேர்க்க வாய்ப்பில்லை. தடுப்பூசிக்கும் கொரோனா மருந்துக்கும் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளுக்கும் மக்கள் படும் அவதி சொல்லி மாளாது.மறுபக்கம் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் சிறுவியாபாரிகள், சுற்றுலா பகுதிகளில் உள்ள மக்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள், திரையரங்க  உரிமையாளர்கள் அதன் ஊழியர்கள், முடிதிருத்துவோர் போன்ற சாதாரண ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரங்கள் பாதித்து பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். கட்டுப்பாடுகளை அறிவித்துக்கொண்டுள்ள அரசு, மக்களுக்கு நிவாரணங்கள் குறித்த அறிவிப்பை ஏதும் செய்யவில்லை. பசி பட்டினியோடு கொரோனா தொற்றை எதிர்த்துப்போராடும் நிலைக்கு சாதாரண மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் விவசாயம், தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. சமூக ஒடுக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதி வெறி  படுகொலைகள் தொடர்கின்றன.சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. பொருளாதார சீரழிவால், முதலில் பாதிப்புக்குள்ளாவது பெண் தொழிலாளர்கள்தான். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் அதிகரித்து வருகிறது.  மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மதவெறியைத் தூண்டுவதில் ஆர்எஸ்எஸ் பரிவாரம் முனைப்பாக உள்ளது. இன்றைக்கு தேசம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது இந்துத்துவா கும்பலின் நாசகர கொள்கைகளே ஆகும். மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சமூக நீதி, மொழிகளின் சமத்துவம், மாநில உரிமை, ஜனநாயகம் என அனைத்து மாண்புகளையும் நரபலி கேட்கிறது இந்தக் கூட்டம்.

கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்போம், சாதி மதவெறி சக்திகளை முறியடிப்போம், அனைத்து உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்காகவும், நல்வாழ்விற்கான திட்டங்களுக்காகவும் போராடுவோம்.    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;