வெள்ளி, மார்ச் 5, 2021

tamilnadu

img

அப்துல் கலாம் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை:
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதுக்கு தகுதியானவர் கள் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது.தமிழக முதலமைச்சரால் சுதந்திர தினத்தன்று ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது வழங்கப்படுகிறது.விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர் நலன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதும், விருதுடன் ரூ.5 லட்சத்துக் கான காசோலை, 8 கிராம் தங்கத்தினாலான பதக்கம், பாராட்டுச் சான்றும் வழங்கப்படும்.

தகுதியுடையோர் உரிய ஆவணங்களுடன் ஜூலை 15ஆம் தேதிக்குள், அரசு முதன்மைச் செயலாளர், உயர் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 9 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

;