tamilnadu

img

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்,  திருவண்ணாமலை ஒன்றியம் சு. பாப்பம்பாடி கிராம மக்கள் 100 நாள் வேலை கேட்டு திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வட்டாரச் செயலாளர் ஜெயராணி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் டி.கே.வெங்கடேசன், செயலாளர் பிரகலநாதன், சிஐடியு மாவட்டச்  செயலாளர் பாரி, ஒன்றிய செயலாளர் கே.வெங்கடேசன் நிர்வாகி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச்  செயலாளர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் வட்டர வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.