கோவை, ஜூலை 9– பொதுபோக்குவரத்தை சீர்குலைக்கும் மோட்டார் வாக னச் சட்ட திருத்தத்தை கைவிட வலியுறுத்தி செவ்வாயன்று சாலை போக்குவரத்து தொழிலா ளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லாரி, கூட்ஸ், ஆட்டோ, ஆம்னி, டெம்போ, டேக்சி வாகன ஓட்டுனர்களும், வாகன பழுது பார்ப்போர் என பத்து கோடிக் கும் மேற்பட்டோர் சாலை போக்கு வரத்தை நம்பி உள்ளனர். இவர் களின் வாழ்வாதாரத்தைப் பறிக் கும் வகையில் பன்னாட்டு நிறு வனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு மோட்டர் வாகன சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறது. கோடிக் காணக்கானோரின் வாழ்வாதா ரத்தைப் பறிக்கும் இந்த சட்டத் திருத்தத்தை கைவிட வலி யுறுத்தி செவ்வாயன்று சிஐடியு சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்கத்தின் சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை சிவானந்தகாலனி பவர்ஹவுஸ் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.வேணு கோபால் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க செயலாளர் ஏ.எம்.ரபீக், இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் தொழிற்நுட்ப பணியாளர் சங்கத்தின் தலைவர் கிசிங்கர், செயலாளர் சதாசிவம் ஆகியோர் உரையாற்றினார். மோட்டார் வாகன சட்டதிருத்தத்தினால் ஏற்படும் அபாயங்கள் குறித்து சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி சிறப்புரையாற்றினார். முன்னதாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை ஜிஎஸ்டி வரம்பிற் குள் கொண்டு வரவேண்டும். இன்சூரன்ஸ் கட்டண உயர் வைக் கைவிட வேண்டும். டோல் கேட் கட்டணங்களை குறைத்து நெறிப்படுத்து, காலாவதியான டோல்கேட்டை அகற்ற வேண் டும். ஆர்டிஓ மற்றும் காவல்துறை யினரின் முறைகேடுகள், அத்து மீறல்களை தடுத்திடு போன்ற முழக்கங்களை எழுப்பினர். இதில் சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர்கள் அப்துல்கலாம், வேன் ரபீக் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர். முடிவில் சங்க பொருளாளர் கே.ராஜசேகர் நன்றி கூறினார்.
ஈரோடு
ஈரோடு மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் ஆட்டோ தொழி லாளர் யூனியன் சார்பில் பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பாலு தலைமை வகித்தார். சாலைப்போக்குவரத்து தொழி லாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.கனகராஜ், ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத் தின் பொதுச்செயலாளர் எஸ்.ஷேக்தாவூத் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னார்கள். அரசு போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் கே.மாரப் பன், பொருளாளர் எஸ். தனபால் உட்பட பலர் பங்கேற்றனர்.