tamilnadu

img

மீண்டும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் காவிரி டெல்டா மாவட்டங்கள்…

திருவாரூர்:

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா மாவட்டங்கள் விளங்குகின்றன. காவிரி டெல்டா பகுதியில் உள்ள விளைநிலங்களின் மொத்த பரப்பளவு 28 லட்சம் ஏக்கர். கர்நாடகாவின் சண்டித்தனம், கால்வாய் பராமரிப்பின்மை காரணமாக இதில் ஏற்கனவே பல ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசாக மாறிவருகிறது.  இதுபோதாதென்று அடுத்தடுத்துமத்திய அரசு அறிவித்தஹைட்ரோ கார்பன் திட்டங்களால், டெல்டா பகுதியே பாலைவனமாகும் சூழல் கடந்தாண்டு உருவானது. அரசியல் கட்சி
யினர், விவசாயிகளின் அழுத்தம்காரணமாக காவிரி பாசனமாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக கடந்த பிப்ரவரி 9ஆம் தேதிதமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. டெல்டா பகுதியில் எந்தவிதமான புதிய ஹைட்ரோ கார்பன்திட்டங்களும் செயல்படுத்தப்படாது என்று அரசு அறிவித்தது.அப்போது காவிரி பாசன மாவட்டங்களை ஒட்டிய ஆழ்கடல் பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன்திட்டங்களும் செயல்படுத்தப்படாது என்று அரசு அறிவித்தது. ஆனால் காவிரி பாசன மாவட்டங்களை ஒட்டிய ஆழ்கடல்பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன்திட்டத்தை செயல்படுத்துவதற்கான உரிமத்தை தற்போது ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்தியஅரசு வழங்கியுள்ளது. இதற்காக தமிழகத்தின் கடல்பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துடன் மத்திய அரசுஒப்பந்தம் செய்துள்ளது.

இவற்றில் வேதாந்தா நிறுவனத்துக்கு-2, ஐஒசி-1, ஓஎன்ஜிசிக்கு-3 ஒப்பந்த பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 6 வட்டாரங்களிலும் நேரடியான பணிகள் இன்னும்தொடங்கப்படவில்லை. இதற்கு காரணம் தமிழகம் மற்றும் டெல்டாமாவட்டங்களில் நிலவும் கடும்எதிர்ப்புத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஓஎன்ஜிசிக்கு வழங்கப்பட்ட 7இல் ஒரு இடம் தமிழகத்தில் இடம் பெற்றுள்ளது. இது தமிழகத்தில் காவிரிப் படுகைக்கு கிழக்கே அமைந்துள்ள ஆழ்கடல் பகுதியில் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் காவிரிப் படுகையில் பெரும்பான்மையான நிலப் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து முதல் முறையாக ஆழ்கடல் பகுதியில் அதற்கான அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

5வது ஒஏஎல்பி முறையில் போடப்பட்ட ஒப்பந்தங்களின் மொத்தப் பரப்பளவு 19,789,04 சதுரகி.மீ ஆகும். இதில் தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் 4,064, 22 சதுர கி.மீ இடம் பெற்றுள்ளது. மற்றவை ராஜஸ்தான் 2, குஐராத் 4, அசாம் 2, மகாராஷ்டிரா, மேற்குவங்க மாநிலங்களின் நிலப் பகுதிகடல் பகுதிகளில் அமைந்துள்ளன. இது மீனவர்கள், விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் இந்த கடல்பகுதிகள் தான்  மீன் வளம் மிகுந்த ஆழ்கடல் பகுதிகள். இத்திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். அதனால் அப்பகுதி மீனவர்கள் 15 லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டி வரும். ஆழ்கடலில் எடுக்கப்படும்ஹைட்ரோகார்பன் வளங்களை அப்படியே கடலிலா பயன்படுத்தப்போகிறார்கள்? அதை நிலத்துக்குகொண்டுவர விளைநிலங்களில் குழாய்கள் புதைக்கப்படும் என்பதால் அது விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல்புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு அறிவிப்பது நியாயமல்ல. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற மத்திய அரசுமுயல்கிறதோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்படுகிறது. டெல்டாவுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை தடுத்தே தீர வேண்டும். இதற்கு அனைவரும் ஓரணியில் திரண்டு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இந்நிலையில் காவிரிப் படுகையில் மட்டும் 6 வட்டாரப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கமீண்டும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது மீனவர்கள், விவசாயிகள், மக்கள் அனைவரையும் பாதிக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து இதுவரைகாவிரி டெல்டாவில் உள்ள அதிமுகஅமைச்சர்கள் யாரும் வாயைதிறக்கவில்லை. ஏன் முதலமைச்சரோ தமிழக அரசோ எதுவுமே கூறவில்லை. இப்படித்தான் அதிமுக அரசும் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஆகியோரும் தமிழக உரிமைகளைத் தொடர்ந்து தாரை வார்த்து வருகின்றனர். தற்போது இத்திட்ட அறிவிப்பால் காவிரி டெல்டா மாவட்டங்கள் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி யுள்ளது.

;