tamilnadu

610 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக சேர்ப்பு

சென்னை, மே 17- பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறி விப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளி யிட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பட்டதாரி ஆசிரியர்/வட்டார வள மைய பயிற்றுநர் 2023-2024ஆம் ஆண்டில் 2222 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 25.10.2023 அன்று அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 360 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை அறிவிப்பு கடந்த 15.11.2023 அன்று வெளியிடப்பட்டது. மேலும் 610 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம்வா https://www.trb.tn.gov.in/ யிலாக மே 17 அன்று வெளியிடப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.