இலங்கைக்கு அழைத்துச் செல்லும் எழுத்தாளர் சு.வினோத்குமார்
“மீண்டும் தேயிலை வாசம்” என்ற புத்தகத்தில் தன் வாழ்வில் நடக்கும் அனுபங்களையும், இலங்கை நாட்டிற்கு பயணம் செல்ல வேண்டும் என்ற தூண்டுதலையும், சிங்களர் மற்றும் தமிழர் இன வேறுபாடுகளையும் மிகவும் ஆழ்ந்த சிந்தனையோடு எழுத்தாளர் ஜெயசிங் எழுதி இருக்கிறார். முந்தைய காலம் மற்றும் நிகழ்காலங்களோடு ஒப்பிட்டு நடைபெறும் மாற்றங்களையும் குறித்து புத்தகத்தில் இருக்கிறது.
இலங்கையின் பொருளாதாரம் எதற்காக நலிவடைந்து குறித்தும், தவறான அணுகுமுறைய முன்னெடுத்த அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கையை இந்தப் புத்தகம் விமர்சித்துள்ளது. இலங்கையின் அதிபர் ஆட்சிமுறையும், நேரடியாக மக்கள் வாக்களிப்பதும், விகிதாச்சாரம் முறையில் தேர்வும், இரு மாகாணங்களின் முதலமைச்சர் தேர்வு பற்றியும் இருக்கிறது. சிங்கள அரசியல் உறவுகள் மற்றும் இலங்கை மக்கள் உறவுகள் எப்படி இருந்தது, அங்கு தமிழர்கள் எந்த அளவுக்குப் பாதிப்பு அடைந்தார்கள் என்று எழுத்தாளர் கூறுகிறார்.
இந்தப் புத்தகத்தில் நிறைய வார்த்தைகள் புதியதாகவும் பிடித்ததாகவும் இருக்கும். “ கதைப்போம், மரக்கறி உணவுகள்” என்று நிறைய இடங்களில் இருக்கும்.
இடம்பெயர்ந்த மலையலக தமிழர்களை சந்திக்க வவுனியாவுக்கு செல்லும் எழுத்தாளர் பேருந்துகளில் வித்தியாசமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டது. காணி பத்திரம் பெறுவது இலங்கையில் முக்கியான ஒன்றாக பார்ப்பதாக புத்தகத்தில் இருக்கிறது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் இலங்கைத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி, குறிப்பாக 2009 போரில் நிறைய பாதிப்புகள் நடந்திருப்பதையும், அங்கு இப்போது இருக்கும் தமிழர்கள் அது குறித்து எழுத்தாளரிடம் விரிவாக கூறியதும் இருக்கிறது.
என்றும் மனதில் நிற்கும் தலைமன்னார் இடத்தில் இருந்து 27வயதில் தான் பிறந்த மண் இலங்கையில் இருந்து ஒரு இளைஞன் பிரிந்து வந்த சூழ்நிலையை மரணத்துக்கு சமம் என்று எழுத்தாளர் சொன்னவிதம் நெகிழ்ந்தது.இலங்கையில் மோசமான உடன்படிக்கையின் விளைவாக மக்கள் அனைவரும் தலைமன்னாரில் இருந்து பிரிய மனமில்லாமல் அழுகையோடு கிளம்பியதாகவும் புத்தகத்தில் கூறுகிறார்.
புகழ்பெற்ற யாழ் நூலகத்தைப் பற்றியும் சில கருத்துக்களை முன் வைக்கிறார். யாழ்ப்பாணம் தமிழர் அதிகம் வாழும் பகுதியாகவும், 2009ல் போரின் பின்பு இப்போது இயல்புநிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது என்பதை எழுத்தாளர் எழுத்துகளில் புரிய முடிந்தது.
மலையக நோக்கிய பயணத்தில் அங்கு அவர் படித்த கல்லூரிகள், ஒரு பேராதானைப் பல்கலைக்கழக விரிவுரையாளரைச் சந்தித்து தொடர்ந்து பேசிக்கொண்ட அனுபவங்களையும் புத்தகத்தில் கூறுகிறார். மலையலகம் என்பது உயரமாக மலைகளும், நிறையப் பெருந்தோட்டங்கள் நிறைந்து காணப்பட்டது. இங்கு மலையக காந்தி எனப் பெயர் சூட்டப்பட்ட தோழரின் கதையும், லயனில் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கை குறித்து எழுதிருக்கிறார்.
எழுத்தாளர் தன் பதினைந்து நாள் பயணத்தை துவங்கும்போதும், முடிக்கும்போது தேநீருடன்( Plain Tea) உடன் இருந்திருப்பதை நம்மால் அறிய முடிகிறது. சிலோன் டீ என்பது மிகவும் முக்கியமான தேயிலை வாசம் கொண்டது. மலையக மக்கள் அந்த தேநீர் வாசத்தைப் பெற்றுக் கொண்டே வாழ்த்திருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது. அந்த தேயிலை வாசத்தை நுகர்ந்த எழுத்தாளர் ஜெய்சிங் இந்த புத்தகத்தை அதன் வாசத்தோடு எழுதியுள்ளார்.
மீண்டும் தேயிலை வாசம்
விலை ₹180 / 182 பக்கம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
சென்னை
தொடர்புக்கு 044 24332924
இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல
சில நாட்கள் முன்பு பாரதி புத்தகாலயத்தில் ஒரு தோழர் பரிந்துரைத்த இந்த நூல், “கருத்து வேறுபாடுகளின் குரல்கள்” என்ற விரிவான ஆய்வு நூலின் முன்னோடியாக அமைந்துள்ளது.
பேராசிரியர் ரொமிலா தாப்பர் பண்டைய காலத்தில் இந்தியாவில் தொடங்கி இன்றைய காலம் வரையிலான சமூக மாற்றங்களை ஆதாரங்களுடன் விளக்குகிறார். மதங்களில் காணப்படும் கருத்து வேறுபாடுகளும், அவற்றின் மூலம் ஏற்பட்ட கலாச்சார பரிணாம வளர்ச்சியும் விரிவாக ஆராயப்படுகிறது.
எல்லா மதங்களும் ஒரு கடவுளை மட்டுமே குறிப்பிடும் நிலையில், இந்து மதம் பல வடிவங்களையும் பெயர்களையும் கொண்டிருப்பதன் தனித்துவத்தை விளக்குகிறார். இந்து மதத்திற்கும் இந்துத்துவாவிற்கும் இடையேயான அடிப்படை வேறுபாடுகளை தெளிவாக எடுத்துரைக்கிறார்.
இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களுக்கிடையேயான கருத்து முரண்பாடுகளையும், அவற்றால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் எளிமையான முறையில் விளக்குகிறார். மதச்சார்பின்மை என்பதற்கும், மத சகிப்புத்தன்மை என்பதற்கும் இடையேயான முற்றிலும் வேறுபட்ட தன்மைகளை வரலாற்று உண்மைகளுடன் எடுத்துக்காட்டுகிறார்.
சிறிய அளவிலான இந்த நூல், நிறைய புரிதல்களையும் அர்த்தங்களையும் வழங்குவதோடு, வரலாற்று நிகழ்வுகளின் ஊடாக தற்கால சமூக-அரசியல் பிரச்சனைகளையும் ஆராய்கிறது. “கருத்து வேறுபாடுகளின் குரல்கள்” என்ற பெரிய நூலை வாசிக்க தூண்டும் முன்னோட்டமாகவும் இந்த நூல் அமைந்துள்ளது.
இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல
நூலாசிரியர்: பேரா.ரொமிலா தாப்பர்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 23/ விலை ரூ.25
ஒடுக்கப்பட்ட மாணவன் வென்ற கதை
முடிதிருத்தும் தொழிலாளியின் மகனாக பிறந்த மால்கம் என்ற மாணவனின் கல்விப் பயணத்தை விவரிக்கும் நூல். முதல் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முதல் மாணவனாக திகழ்ந்த அவன், பத்தாம் வகுப்பிலும் பன்னிரெண்டாம் வகுப்பிலும் எதிர்கொண்ட சவால்களையும், NEET தேர்வில் வெற்றி பெற்ற பாதையையும் விவரிக்கிறது.
குட்டி பத்மினி டீச்சர் போன்ற சாதிய பாகுபாடு காட்டும் ஆசிரியர்களின் எதிர்ப்பையும் மீறி, அகமது ஜமால் மாஸ்டர் போன்றோரின் உதவியுடன் முன்னேறிய கதை. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்திற்கான போராட்டத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
பகை நன்று
நூலாசிரியர்: - மால்கம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 88 / விலை ரூ.90
கண் முன் விரியும் பள்ளிக்கூடம்
“ரெட் இங்க்” என்ற தலைப்பே தனித்துவமானது. சிவப்பு நிறம் இரத்தத்தின் அடையாளமாக இருப்பதைப் போல, ஆசிரியர்களின் திருத்துப் பணிகளிலும் சிவப்பு மை முக்கியத்துவம் பெறுகிறது. எழுத்தாளர் ஒரு ஆசிரியர் என்பதை இந்தத் தலைப்பே உணர்த்துகிறது.
பத்து சிறுகதைகளின் தொகுப்பாக அமைந்த இந்நூலில், எழுத்தாளரின் கல்வித்துறை அனுபவங்கள் பதிவாகியுள்ளன. பணி மாற்றத்தில் கிராமத்துக்குச் சென்ற ஆசிரியரின் அனுபவம், ஆசிரியர் தினக் கொண்டாட்டம், மாணவர்களின் கோழிக் குஞ்சு வளர்ப்பு, குடிப்பழக்கமுள்ள தந்தையின் மகன் கார்த்திக்கின் பள்ளி வாழ்க்கை, தோல்வியடைந்த மாணவன் ராஜாவின் கதை, பருவ வயது மாணவர்களின் உணர்வுகள், ஜெயந்தி என்ற சிறந்த மாணவியின் வளர்ச்சி, குடும்பச் சூழலால் பாதிக்கப்பட்ட ஜீவிதாவின் கல்விப் பயணம் என பல்வேறு கோணங்களில் பள்ளி வாழ்க்கையை விவரிக்கின்றன கதைகள்.
“வெள்ளைப் பூக்கள்” என்ற கதை மிக முக்கியமானது. தாச்சி போன்ற பெண்களை காப்பாற்ற முன்வரும் போஸ் அண்ணன், டீ மாஸ்டர், ஆசிரியர் போன்றோரையும், மனிதாபிமானமற்ற பன்னீர் டீக்கடைக்காரர் போன்றோரையும் எதிர்நிலைப்படுத்திக் காட்டுகிறது.
பள்ளிச் சூழலில் மாணவ-மாணவியரின் வாழ்வியல், ஆசிரியர்களின் அக்கறை, கல்வித்துறையின் நிகழ்வுகள் ஆகியவற்றை நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார் எழுத்தாளர்.
ரெட் இங்க்
விலை ரூ.110 / 102 பக்கம்
வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை
தொடர்புக்கு 044 24332924
எளிய மனிதர்களின் கதைகள்
முருகம்மா - இந்நூல் சமூகப் பார்வையோடும், சமூகப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வோடும் எழுதப்பட்டுள்ளது. பக்கங்கள் குறைவாக இருந்தாலும், அதில் பேசப்படும் கருத்துகள் அனைத்தும் முக்கியமானவை.
பத்து சிறுகதைகளின் தொகுப்பாக அமைந்துள்ள இந்நூலின் முதற் கதையின் தலைப்பிலேயே வரும் முருகம்மா என்ற பெண், இரு பாதங்கள் உள்நோக்கி மடங்கியும் முழங்காலுக்குக் கீழே சிறுத்தும் இருப்பவள். அவளுக்கு நடக்கும் அநீதிகளைப் பேசும் கதையில், அவளிடம் மட்டும் முடிவுகளைக் கேட்கவில்லை என்று ஒரு பெண்ணுக்கு எதிராக நடக்கும் அவலங்களை முன்வைக்கிறார் ஆசிரியர்.
“இயற்கை வளங்களைப் பாதுகாப்போம், கனிம வளங்களைப் பாதுகாப்போம்” என்று பேசிக்கொண்டே நகரமயமாக்கல் கிராமங்களை நோக்கிச் செல்வதை விமர்சிக்கிறார். உண்ணாமலை என்ற பெண் தேவிமலையைத் தேடும் கதை, மாதம்மாவின் சிறுவயதுத் திருமணம், பேசவேண்டிய இடத்தில் பேசாமல் இருக்கும் சரோஜாம்மாள், செருப்பால் அடிப்பேன் என்று பேசும் மாயவன், மணல் அள்ளும் தொழிலாளர்களின் போராட்டம், நாடகக் குழுவினரின் வாழ்வியல், நெடுஞ்சாலை விபத்துகள், ருக்குமணி பாட்டியின் உதவித்தொகை நிறுத்தம், விஜயனின் உக்கிரம், கோலமாவு விற்கும் பூங்காவனம் என சாதாரண மக்களின் வாழ்வியல் சிக்கல்களை வெளிப்படுத்துகின்றன கதைகள்.
சாதாரண மக்களின் வாழ்க்கைமுறை, சமூக அவலநிலை, சாதீய வேறுபாடுகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் இந்நூலில் எழுத்தாளரின் சமூகப் பார்வை தெளிவாகத் தெரிகிறது. சிந்திக்க வைக்கும் படைப்பு.
முருகம்மா
நூலாசிரியர் : சங்கர்
விலை ரூ.40 / 48 பக்கம்
வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை
தொடர்புக்கு 044 24332924
இளைய தலைமுறைக்கான அறிவியல் நூல் -எம்.ஜே.பிரபாகர்
நிலவுப் பயணத்தின் குறிக்கோளை அடைவதற்கு மனித குலம் ஒன்றாக இணைந்து செயல்படுவது அவசியம் என்ற கருத்தை முன்வைக்கும் எட்டு அத்தியாயங்கள் கொண்ட அற்புதமான அறிவியல் நூல். 50 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நிலவு ஆராய்ச்சி மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், இந்த நூல் மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது.
இந்தியாவின் சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய வரலாற்று நிகழ்வை விவரிப்பதோடு, எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் குடியேறுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராய்கிறது. நிலவு புவியிலிருந்து விலகிச் செல்வது, கிரகணங்கள், நிலவில் காற்றின்மை, கடல் அலைகளுக்கும் நிலவுக்குமான தொடர்பு போன்ற பல்வேறு அறிவியல் கேள்விகளுக்கும் விடையளிக்கிறது.
தமிழக அரசின் சிறந்த அறிவியல் எழுத்தாளர் விருது பெற்ற ஆசிரியர், இஸ்ரோவில் விஞ்ஞானியாகப் பணிபுரிபவர். 20-க்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்.
இளைய தலைமுறையினர் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
நிலவு எனும் கனவு
நூலாசிரியர்: அறிவியல் அறிஞர் முனைவர் பெ. சசிகுமார்
விலை: ரூபாய் 180/-
வெளியீடு: புதையல் பதிப்பகம்
தொடர்புக்கு: 9865257071
மின்னஞ்சல்:
puthayalpublication@gmail.com
செயற்கை தீவுகளை உருவாக்கிய கற்கால மனிதர்கள்
மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை விரிவாக ஆராயும் 10 அத்தியாயங்கள் கொண்ட நூல். மரபணு ஆராய்ச்சியில் தாய்வழி முக்கியத்துவம், மனித இனப்பரவல், தோல் நிற மாற்றங்கள், அமெரிக்க புலம்பெயர்வு, ஆஸ்திரேலிய பழங்குடியினர்-தமிழர் தொடர்பு போன்ற முக்கிய தலைப்புகளை அறிவியல் பூர்வமாக ஆராய்கிறது.
4000 ஆண்டுகளுக்கு முன்பே கற்காலத்தில் மனிதகுலம் செயற்கை தீவுகளை உருவாக்கியது, 1870களில் மனித ஆயுட்காலம் 30 ஆண்டுகளாக இருந்து இன்று 75 ஆண்டுகளாக உயர்ந்தது போன்ற சுவாரசியமான தகவல்களை வழங்குகிறது.
அமெரிக்க வாழ் தமிழர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் செயலாளரான ஆசிரியர், பெண்களின் வரலாற்று முக்கியத்துவத்தையும், அவர்களின் மரபணு வழி ஆராய்ச்சியின் பங்களிப்பையும் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.
மனித இனத்தின் பரவலும் வளர்ச்சியும்
நூலாசிரியர்: ஜோதி.எஸ்.தேமொழி
விலை: ரூ.150/-
வெளியீடு: சந்திரோதயம் பதிப்பகம்
தொடர்பு எண்: 7010997639