tamilnadu

img

வடசென்னையின் வளர்ச்சிக்கு சிறப்பு திட்டம் அவசியம்!

சென்னை, ஆக. 18- வடசென்னையின் வளர்ச்சிக்கு சிறப்பு திட்டம் அவசியம் என்று வட சென்னை குடியிருப்போர் நலச்சங் கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது

வடசென்னையை குற்றங்கள் நிறைந்த மாவட்டமாக முத்திரை குத்து வதை கைவிடுங்கள் என்பதை வலி யுறுத்தியும் வடசென்னை முழுவதும் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங் களை இணைத்து “வடசென்னை குடி யிருப்போர் நலச்சங்கங்களின் கூட்ட மைப்பு” துவக்க விழா ஞாயிறன்று (ஆக. 18) பெரம்பூர் வியாசர்பாடியில் நடைபெற்றது..

நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் பொறு ப்பாளர் டி.கே.சண்முகம் தலைமை தாங்கி பேசுகையில், வடசென்னை என்றாலே குற்ற நகரம் அல்லது லேபர் நகரம் என்று அழைக்கப்படுகிறது. வட சென்னையில் வாழ்பவர்களை குற்ற வாளிகளாக பார்க்கும் பார்வை அரசியல்வாதிகள், காவல் துறையினர், அரசு அதிகாரிகள் மத்தியில் நிலவு கின்றன. அப்படியென்றால் இங்கு வாழ்பவர்கள் எல்லாம் குற்றவாளிகளா என்றும் லேபர் என்றால் அவ்வளவு கேவலமா என்றும் கேள்வி எழுப்பி னார். வடசென்னையை குற்ற நகரமாக சித்தரிப்பதை திரைத்துறை யினர் கைவிட வேண்டும் என்ற வேண்டு கோளையும் அவர் முன்வைத்தார்.

கடல்சார் பொருளாதாரத்தின் தூண்

வட சென்னை தான் கால்பந்து, குத்துச்சண்டைகலை, சிலம்பம், நீச்சல், இசை (கர்நாடிக், கானா) இவை அனை த்திற்கும் பெயர் பெற்றவை. ஏராளமான தொழிற்சாலைகள் நிறைந்த நகரம். கடல்சார் பொருளாதாரத்தின் தூண் வடசென்னை. காசிமேடு மீன் பிடி துறை முகத்தில் இருந்து ஆண்டுக்கு 50 ஆயிரம் டன் மீன்கள் ஏற்றுமதி செய்ய ப்படுகின்றன. இதன்மூலம் அந்நிய செலாவணி கூடுகிறது. அதேபோல் சென்னையில் வசிக்கும் மக்கள் தினசரி 2 டன் மீன்கள் வாங்கு கிறார்கள். 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மீன்பிடி துறைமுகம் மூலமாக வியாபாரம் நடைபெறுகிறது. அதனால் தான் வடசென்னையை கடல்சார் பொரு ளாதார மண்டலமாக அரசு ஏற்றுக் கொண்டாலும், அதை வெளியே கூற மறுக்கிறது.

அனைத்துதுறையிலும்  முத்திரை பதித்தவர்கள்

விளையாட்டு, சட்டம், எழுத்து, திரைத்துறை, அரசியல் என அனைத் திலும் வடசென்னை மக்கள் முத்திரை பதித்து வருகின்றனர். உழைப்பு, அறிவு என பன்முகத்தன்மை கொண்ட நகர மாக வடசென்னை இருக்கிறது என்பதை நாம் உரத்துக் கூற வேண்டும். இதை மக்கள் கருத்தாக மாற்ற வேண்டும். வடசென்னையின் உள்கட்ட மைப்புக்கு அரசு நிதி ஒதுக்குகிறது. மாநகராட்சி பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. ஆனால் எந்த இடத்தில் எது தேவை, எதை மேற் கொண்டால் வடசென்னையை வாழ்விட நகரமாக மாறும் என்பதை  ஆராய்ந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு புகை, விஷவாயு, குப்பை மேடுகளில் இருந்து வெளி யேறும் புகை இவற்றை முறையாக தடுத்து, போதை, மாசற்ற நகரமாக வட சென்னையை உருவாக்க வேண்டும் என கோருகிறோம். தென் சென்னை யில் ஒரு சதுர கி.மீட்டரில் 100 வாகங்கள் செல்கிறது என்றால், அதுவே வட சென்னையில் 200 வாகனங்கள் செல்கின்றன. அப்படியென்றால் வட சென்னையில் மக்கள் அடர்த்தியாக உள்ளனர். எனவே சென்னைக்கு என்று ஒரு திட்டம் உருவாக்கும் போது, அடர்த்தியாக மக்கள் வசிக்கும் வட சென்னைக்கு என்று கூடுதலாக சிறப்பு திட்டம் தேவைப்படுகிறது, அதை அரசு கவனத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

பெரும்பகுதி மக்களிடம் கருத்து கேட்டிடுக

3ஆவது மாஸ்டர் பிளான் உருவாகும் போது அரசு 40 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்டதாக கூறுகிறது. ஒன்னேகால் கோடி மக்கள் வசிக்கக் கூடிய சென்னையில் 40 ஆயிரம் பேரி டம் மட்டும் கருத்து கேட்டு ஒரு  திட்டத்தை நிறைவேற்றினால் அது  எப்படி ஒரு முழுமையான வளர்ச்சி திட்ட மாக இருக்க முடியும். எனவேதான் குடி யிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை, அங்கு வசிக்கும் துறை சார்ந்த வல்லு நர்களை அழைத்து அவர்களிடம் கருத்து கேட்டு திட்டங்களை நிறை வேற்ற வேண்டும். அப்போதுதான் அது வளர்ச்சியடைந்த நகரமாக மாறும்.

வடசென்னையில் மிகப்பெரிய நூலகம், கலை அரங்கம், மருத் துவக் கல்லூரியுடன் இணைந்த மருத்து வமனை, ஆட்டோமேடிக் பொறி யியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அனை வரும் ஒன்றிணைந்து வளர்ச்சியடைந்த வடசென்னையை உருவாக்குவோம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

நிதிதர மறுக்கும் ஒன்றிய அரசு 

சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் பேசுகையில், நூலகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து ள்ளீர்கள். இதுகுறித்த கோரிக்கையை அரசிடம் முன்வைத்துள்ளேன், அதற்கான ஆணை விரைவில் வரும். என்று கூறினார்.

தியாகிகள் உருவான பகுதி

ரெப்கோ வங்கி சேர்மன் இ.சந்தா னம் பேசுகையில், தொழிற்சாலை களுக்கு உகந்த இடமாக அன்று வட சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் இருந்து வெளியேறும் கழிவு கள் இங்கேயே கொட்டப்பட்டதால் மாசு நிறைந்த நகரமாக மாறி விட்டது.  அறிஞர்கள், தியாகிகள் அதிகளவில் உருவாக்கிய பகுதி இந்த வடசென்னை தான். இன்று பேசப்படும் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் அர சியல்தான். அரசியல் இல்லாமல் எது வும் நடைபெறுவதில்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ஏன் கொடுக்கிறாய் என்று கேள்வி எழுப்ப வேண்டும். அந்த பணத்தை வாங்க மறுக்கும் போது தான் நம்முடைய கோரிக்கைகள் முழு மையாக நிறைவேற்றப்படும். அந்த வகையில் கூட்டமைப்பின் செயல்பாடு அமைய வேண்டும். இந்த கூட்டமைப் பின் கோரிக்கைகள் நிறைவேற முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன் என்று கூறினார்.

முறையான திட்டமிடல் இல்லை

நக்கீரன் முதன்மை ஆசிரியர் பிரகாஷ் பேசுகையில், மழை நீர் வடி கால்வாய் அமைக்கப்பட்ட இடங்க ளில் தண்ணீர் செல்ல அமைக்கப்படும் வழிகளில் மண்ணும் செல்கிறது. மண் சென்று வடிகால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டால் மழை நீர் எப்படி அந்த வடி கால் வழியாகச் செல்லும். அதனால் தான் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கு காரணம் முறையான திட்டமிடல் இல்லாததே காரணம்.

கொடுங்கையூர் குப்பை கிடங்கால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால், நச்சு வாயுவால் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கெதிராக நம் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். அனைவரும் முழு மூச்சுடன் இணைந்து செயல்பட்டால் கோரிக் கைகளை நிச்சயம் வென்றெடுக்க முடி யும் என்றார்.

பாடல் வெளியீடு

கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் ஆர்.ஜெயராமன் கோரிக்கை களை விளக்கிப் பேசினார். டி.கே. சண்முகம் எழுதி, பாடகர் முனுகோட் டீஸ்வரன் பாடிய “வட சென்னை அழைக்குது வா” என்ற பாடல் வெளி யிடப்பட்டது. கவிஞர் இரா.தெ.முத்து “நம்ம வடசென்னை, எனும் தலைப்பில் கவிதை வாசித்தார். முன்னதாக வழக் கறிஞர் பி.ஆர்.அஜய்குமார் வர வேற்றார். லட்சுமி நகர் நலச்சங்க தலை வர் பொன்னுசாமி நன்றி கூறினார். இதில் 90க்கும் மேற்பட்ட நலச்சங்கங் களை சேர்ந்த நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய நிர்வாகிகள்

தலைவராக டி.கே.சண்முகம், பொதுச்செயலாளராக ஆர்.ஜெய ராமன், பொருளாளராக பொன்னுசாமி உள்ளிட்ட 105 பேர் நிர்வாகிகளாக, செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.